எவன் சொல்றதுக்காகவும் இல்ல! நான் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்கனும் - எமோஷனான பிக்பாஸ் பிரபலம்

BiggBoss Nixen: விஜய் டிவியில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 7. புதுபுது முயற்சிகளோடு ரசிகர்களை கவரும் விதத்தில் விதவிதமான டாஸ்க்கின் அடிப்படையில் நடைபெற்றுக் கொண்டு வருகிறது.

இந்த வாரம் பிக்பாஸில் இருந்து ப்ராவோ மற்றும் அக்‌ஷயா வெளியேறிய நிலையில் வைல்டு கார்டு எண்டிரியாக அனன்யா மற்றும் விஜய் வர்மா ஆகிய இருவரும் உள்ளே வந்திருக்கின்றனர். வந்ததும் சக போட்டியாளர்களுக்கு விதவிதமான பட்டப்பெயர்களை கொடுத்து அதிர்ச்சிக்குள்ளாக்கினர்.

இதையும் படிங்க: விசித்ராவை விட எனக்கு நடந்தது மோசம்.. காதல் பட நடிகையின் பகீர் தகவல்.. அடப்பாவிங்களா..!

இதில் விஜய் வர்மா நிக்‌ஷனுக்கு பெரிய செக் ஒன்றை வைத்தார். அதாவது நீ சொன்ன பொய்யை வைத்தே உன்னை அட்டேக் செய்வேன் என்று கூறியிருந்தார். அதற்கு நிக்‌ஷன் எந்த பொய் என கேட்க ‘பெரும்பாலும் நீ பேசுறது எல்லாமே பொய்தான்’ என்பது போல் சுட்டிக் காட்டி அதை வைத்தே உன்னை டார்கெட் செய்வேன் என்று விஜய் வர்மா கூறியிருந்தார்.

ஆனால் உண்மையிலேயே அது வினுஷா பற்றிய விஷயம்தான் என பல ரசிகர்கள் ஊகித்து விட்டனர். இதற்கிடையில் நிக்‌ஷன் நேற்று விக்ரமனிடம் வினுஷா பற்றி சில விஷயங்களை பகிர்ந்தார். அதாவது வினுஷாவிடம் ஒரு நல்ல தோழனாகத்தான் பழகினேன். அதனால் அவர் தவறாக எடுத்திருக்க மாட்டார் என்றே நினைத்தே.

இதையும் படிங்க: நல்லா கொழுக்கட்ட மாதிரி இருக்க!.. விஜே பார்வதிக்கு போட்டோவுக்கு குவியும் கமெண்ட்ஸ்..

ஆனால் இந்த விஷயம் வினுஷாவை இந்தளவு பாதித்திருக்கும் என தெரியாமல் போய்விட்டது. அதனால் அவர் எந்தளவு வருத்தப்பட்டிருக்கிறார் என்பதும் எனக்கு புரிகிறது. ஆகவே இந்த சீசனில் இருந்து வெளியே போனதும் முதல் வேளையாக வினுஷாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கத்தான் போகிறேன்.

அதற்காக அவன் சொன்னான். இவன் சொன்னான் என்றெல்லாம் இல்லை. என் மனதுக்கு தோன்றுகிறது. வினுஷாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று. அதனால் கண்டிப்பாக அவர் காலில் விழத்தான் போகிறேன் என விக்ரமனிடம் நிக்‌ஷன் பேசிய வீடியோதான் இப்போது இணையத்தில் வைரலாகின்றது.

இதையும் படிங்க: எடுக்கிறதெல்லாம் குடும்ப சித்திரம்!.. நிஜத்தில் கில்மாத்தனம் – சீனுராமசாமியை விளாசும் ப்ளூ சட்டை மாறன்

 

Related Articles

Next Story