அது பிக்பாஸ் பூர்ணிமாவா? இதுக்காகவே டிரெய்லரை பார்த்தவர்கள் ஏராளம் - என்ன படம் தெரியுமா?

Poornima Ravi: பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் பூர்ணிமா ரவி. இந்த சீசனில் அதிக ரசிகர்களை கவர்ந்த போட்டியாளராக பூர்ணிமா ரவி இருந்து வருகிறார். கடலூரை சேர்ந்த இவர் ஒரு ஐடி நிறுவனத்தில்தான் வேலையில் இருந்தார். அங்கு நடந்த சில பிரச்சினைகள் காரணமாக வேலையில் இருந்து நின்றார்.

அதன் பிறகு தனியாக யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து பல மில்லியன் ரசிகர்களை கொண்ட ஒரு செலிபிரிட்டியாக மாறினார் பூர்ணிமா. அவர் போடும் அத்தனை வீடியோக்களும் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

இதையும் படிங்க: யோசிக்காமல் அகத்தியனுக்கு மணிவண்ணன் செய்த உதவி… கடைசியில் காலம் கொடுத்த சர்ப்ரைஸ்..!

அதனை தொடர்ந்து சில குறும்படங்கள் மற்றும் ஆல்பம் என தன் முகத்தை காட்டி வந்த பூர்ணிமாவுக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதுதான் ஆசை. அதனால் தன்னை மக்கள் அறிய வேண்டும் என்பதற்காகவே இந்த பிக்பாஸ் ப்ளாட்ஃபாரத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார்.

poorani

poorani

ஆனால் பிக்பாஸில் ஆரம்பத்தில் மிகவும் பிடித்த போட்டியாளராக வலம் வந்த பூர்ணிமா மாயாவுடன் சேர்ந்து செய்யும் அட்டகாசம் ரசிகர்களை ஒரு வித வெறுப்புக்கு ஆளாக்கியது. ஒரு கட்டத்தில் தயவு செய்து பூர்ணிமாவை தூக்குங்கள் என்றளவுக்கு ரசிகரகளின் மன நிலை மாறியே போனது என்றும் சொல்லலாம்.

இதையும் படிங்க: பருத்தி வீரன் பிரச்னையில் என்ன தான் நடந்தது? சூர்யாவே இத்தனை மோசமா? திரை விமர்சகர் உடைத்த உண்மை..!

இதற்கு ஒரு படி மேலாக கமலையே பூர்ணிமா விமர்சித்தது ரசிகர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. அதிலிருந்தே கமல் உஷாரானார் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு சாரி கேட்டால் சரியாகி விடும் என்று பூர்ணிமா சொன்னதை கமல் நன்றாக பிடித்துக் கொண்டார்.அதை வைத்தே பூர்ணிமாவை கமல் ஓட்டி வருகிறார்.

இந்த நிலையில் பூர்ணிமா நடித்த ஒரு திரைப்படம் இன்னும் ஒரு சில நாள்களில் திரைக்கு வர காத்துக் கொண்டிருக்கிறது. ஜெய் மற்றும் நயன் நடிப்பில் தயாராகியிருக்கும் படமான அன்னபூரணி திரைப்படத்தில்தான் பூர்ணிமா ரவி நடித்திருக்கிறார்.

இதையும் படிங்க: கொஞ்சம் ராவாத்தான் இருக்கு!.. ஏடாகூடமான உடையில் அழகை காட்டும் ரம்யா பாண்டியன்…

அந்த படத்தின் டிரெய்லரில் நயனுக்கு தோழியாக அவர் பக்கத்தில் நின்றிருப்பார் பூர்ணிமா. ஆரம்பத்தில் அதை சரிவர கவனிக்காத ரசிகர்கள் இப்போது அவரை பார்ப்பதற்காகவே டிரெய்லரை திரும்ப திரும்ப பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

Related Articles

Next Story