Connect with us

Cinema History

பருத்தி வீரன் பிரச்னையில் என்ன தான் நடந்தது? சூர்யாவே இத்தனை மோசமா? திரை விமர்சகர் உடைத்த உண்மை..!

Paruthiveeran: தமிழ் சினிமா வட்டாரத்தில் தற்போதைய சூழலில் பரபரப்பாக இருப்பது என்னவோ பருத்திவீரன் பட விவகாரம் தான். இந்த பிரச்னையில் ரசிகர்களுக்கு முழுதாக என்ன நடந்தது என்பதை பிரபல திரை விமர்சகர் அந்தணன் தன்னுடைய பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

அவர் பேட்டியில் இருந்து, அமீருக்கு நான் தான் வாழ்க்கை கொடுத்தேன். அவர் ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தான் பருத்தி வீரன் படத்தினை இயக்கி கொடுத்தார். அதிலும் செலவை அதிகமாக இழுத்து விட்டார். அவரை நாங்க படம் இயக்க கூப்பிடவில்லை என ஞானவேல் ராஜா பேட்டி கொடுத்து இருந்தார்.

இதையும் படிங்க: நீங்க வேணாம்..! முத்தழகு தான் வேணும்.. ஸ்ரேயா கோஷலை இகோவை கிளறிய அமீர்.. ஆனா ஜெயிச்சது அவர் தானாம்..!

அதை தொடர்ந்து அமீர், படம் பாதியில் இருக்கும் போதே என்னிடம் காசெல்லாம் இல்லை எனக் கூறி ஞானவேல் ராஜா செல்போனை அணைத்து விட்டு வெளியேறிவிட்டார். நான் தான் கடனை வாங்கி கடைசி 65 நாட்கள் படத்தினை இயக்கி முடித்தேன். இந்த பிரச்னையில் என்னுடன் இருந்தவர்களே அமைதி காப்பது ஆச்சரியமாக இருக்கிறது என்றார்.

அதை தொடர்ந்தே சசிகுமார், சமுத்திரக்கனி, பொன்வண்ணன் ஆகியோர் தங்களின் வியூவை ஓபனாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தனர். ஞானவேல்ராஜா தரப்பு படத்துக்கு 2 கோடி மட்டுமே செலவு செய்தது. அமீர் கஷ்டப்பட்டு 1 கோடியே 65 லட்சம் கடனை வாங்கி படத்தினை முடித்தால் கடைசி நாளில் ஸ்டுடியோ க்ரீன் வழங்கும் பருத்தி வீரன் என ப்ரோமோஷன் செய்தனர். இது அமீருக்கு கோபத்தினை கொடுத்தது.

உடனே சூர்யா தரப்புக்கு கால் செய்து பாதியில் போய் விட்டு இப்போ உரிமை கொண்டாடுகிறீர்களே என கொதித்து இருக்கிறார். உடனே நேராகவே வந்து அமீரை சந்தித்து நீங்க செலவு செய்த பணத்தினை வட்டியுடன் தரேன் எனக் கூறி இருக்கிறார். ஆனால் அமீர் வட்டி வாங்குவது இஸ்லாமில் முறையில் இல்லை. நான் செலவு செய்த பணத்தினை மட்டும் கொடுங்கள் எனக் கேட்டு இருக்கிறார்.

இதையும் படிங்க: பிக்பாஸ் தான் இப்ப முக்கியமா? அத விட இத பண்ணியிருக்கலாம் – ஆண்டவர் பொழப்புல மண்ணள்ளிப் போட்டுருவாங்க போல

அதன் முதல் பகுதியாக 30 லட்சத்தினை அமீருக்கு சூர்யா கொடுத்து விட்டு கிளம்பி இருக்கிறார். ஆனால் அவருக்கு யார் என்ன சொன்னார்கள் எனத் தெரியவில்லை. அதன்பின்னர் அவரும் அமீருடன் பேசுவதையே நிறுத்தி இருக்கிறார். ஒரு கட்டத்தில் அவர் கொடுத்த 30 லட்சத்தினை கேட்டும் தொல்லை தருகிறார்.

இதனையடுத்து, அமீர் சூர்யாவிடம் பேச ட்ரை செய்ய ஆனால் அவர் லைனில் வரவே இல்லையாம். எப்போ கால் செய்தாலும் சூர்யாவின் மேனேஜரே வந்து பேசி இருக்கிறார். ஒரு கட்டத்தில் தயாரிப்பாளர் சங்கத்தில் வைத்து மேலிடத்தில் பேசி விட்டோம் எனக் கூறி பருத்திவீரன் படத்தினை எழுதி வாங்கி இருக்கின்றனர். 

அமீருக்கு கொடுக்க வேண்டிய 1 கோடி 65  லட்சமும் கொடுக்காமல் ஏமாற்றி விட்டனர். இதையே அமீர் பலமுறை சொல்லி இருக்கிறார். கார்த்தி 25ல் அமீரை கூப்பிடாமல் கேள்வி எழுப்பவே மீண்டும் இந்த பிரச்னை வெளிச்சத்துக்கு வந்து இருப்பதாக திரை விமர்சகர் அந்தணன் தெரிவித்து இருக்கிறார்.

இதையும் படிங்க: யாருப்பா அந்த பையன்? கமல் படத்தில் நடித்த நடிகரை பார்த்து மிரண்ட ரஜினி

google news
Continue Reading

More in Cinema History

To Top