அட பிக்பாஸ் பூர்ணிமாவா இது? டோட்டலா மாறிட்டாங்களே.. இருந்தாலும் அழகு கொஞ்சம் தூக்கல்தான்

poornima
Biggboss Poornima: பிக்பாஸ் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பூர்ணிமா ரவி. கரு நிறத்திலும் ஒரு அழகு என்று சொல்வார்கள். அது உண்மையாகும் பட்சத்தில் மிகவும் அழகான தோற்றத்தை கொண்டவராக பிக்பாஸ் நிகழ்ச்சியில் தோன்றினார். பிக்பாஸ் ஏழாவது சீசனில் ஆரம்பத்தில் மக்கள் விரும்பும் போட்டியாளராகத்தான் இருந்து வந்தார். ஆனால் போகப் போக புல்லி கேங்காக மாயாவுடன் சேர்ந்து செய்த அட்டகாசம் மக்களின் வெறுப்பை சம்பாதித்தார்.
மேலும் விஷ்ணுவுடான காம்போவும் சில சமயங்களில் ரசிக்கும் படியாக அமைந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன் பூர்ணிமா கிடைக்கிற வேலைகளை செய்து கொண்டு வந்தார். அதனால் பிக்பாஸ் நிகழ்ச்சி அவருக்கு ஒரு பெரிய ப்ளாட்ஃபார்மாக மாறியது. வெளியே வந்ததும் அவர் நடித்த படம் ஓடிடியில் வெளியானது.
இதையும் படிங்க: மகிழ்திருமேனிகிட்ட அந்த பருப்பெல்லாம் வேகாது.. ‘விடாமுயற்சி’ பற்றி வாய்திறந்த நடிகை
படத்திலும் சின்ன சின்ன ரோல்களில் நடித்தும் வருகிறார் பூர்ணிமா ரவி. நிக்ஷனுடன் தம்பி என்ற வகையில் பழகி வந்த பூர்ணிமா மிகவும் நெருக்கமாக தொட்டு தொட்டு பேசுவது என பிக்பாஸ் வீட்டிற்குள் நடந்ததை பார்த்து மக்களும் எரிச்சலடைய ஆரம்பித்தனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அந்த புல்லி கேங்க்தான் ஒன்றாக வெளியே சுற்றி வருகிறார்கள். எங்கு போனாலும் ஒன்றாக செல்வது, மீட் பண்ணுவது என ஒரே மஜாவாக இருக்கிறார்கள். இந்த நிலையில் பூர்ணிமாவின் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
இதையும் படிங்க: 3 நாள் தொடர் விரதம்… ஷூட்டிங்கிற்கு முன்னர் சரக்கு… துணியில்லாமல் அந்த காட்சியில் பிரித்விராஜ் நடித்தது இப்படித்தான்!
சிம்ரன் நடித்த ஐட்டம் பாடலான சுல்தானா பாடல் ரீல்ஸில் அமைந்த அந்த வீடியோவில் பூர்ணிமா பார்க்கவே மிகவும் அழகாக அவர் அழகு கொஞ்சம் மெருகேறியிருப்பதாகவே தெரிகிறது. ஏதோ ஒரு விழா மேடையில் ஆடுவதற்கு தயார் ஆடிக் கொண்டிருப்பதை போன்று தோன்றியது. ஏனெனில் டான்ஸ் ரிகர்ஸலும் செய்து கொண்டிருந்தார்.
இதோ அந்த வீடியோ லிங்க்: https://www.instagram.com/reel/C5QLaD3P_NG/?utm_source=ig_web_copy_link