Connect with us
poor

Biggboss Tamil 7

இத விட யாரும் பண்ண முடியாது! பூர்ணிமாவை ட்ரோல் செய்து வீடியோ போட்ட சீசன்6ன் ஃபேவரைட் போட்டியாளர்

Poornima Ravi: பிக்பாஸ் சீசன் 7 இறுதிகட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது. யார் அந்த டைட்டில் வின்னரை தட்டி செல்ல போகிறார் என்ற ஒரு எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் இருந்து வருகிறது. இந்த வாரம் முழுவதும் எவிக்ட் ஆகி வெளியே போனவர்கள் எல்லாம் கெஸ்டாக உள்ளே வந்து கொண்டிருக்கிறார்கள்.

ஏற்கனவே அக்‌ஷயா, அனன்யா, போன்ற போட்டியாளர்கள் உள்ளே வந்த நிலையில் இன்று விக்ரமும் உள்ளே வர இருக்கிறார். மாயாவின் வன்மத்திற்கு ஆளாகியும் உள்ளே வந்ததும் அந்த மாயா கும்பலுடன் சேர்ந்துதான் சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருக்கிறார்.

இதையும் படிங்க: டேய் இது குடும்பமா இல்ல மென்டல் ஆஸ்பிட்டலா? எப்ப பாத்தாலும் தப்பை முத்து மேலயே போடுறீங்க?

இதை பார்த்த ரசிகர்களும் கடுப்பாகி மீண்டும் விக்ரமை கிழித்துத் தொங்க விட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் கடைசியாக பூர்ணிமா 16 லட்சத்தை தூக்கிக் கொண்டு வெளியே போக அவருக்கு ஏகப்பட்ட வரவேற்புகள் வெளியில் காத்துக் கொண்டிருந்தன.

முதல் வேளையாக விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திய பூர்ணிமாவை அவர் வீட்டார்கள் பெரும் வரவேற்பை கொடுத்து வரவேற்றனர். இந்த பிக்பாஸ் வீட்டில் அதிக எரிச்சலை சம்பாதித்தது பூர்ணிமாவும் மாயாவும்தான்.

இதையும் படிங்க: கடைசி நேரத்துல சிக்கல்!.. புரமோஷன் பண்ணது எல்லாம் வீணா?.. அந்த படம் வெளியாகாதாம்?..

ஆனால் என்ன காரணத்தினாலோ கடைசி வரை அவர்கள் வீட்டில் தாக்குப் பிடித்துக் கொண்டிருந்தனர். அதில் மாயா ஃபைனலை எதிர்க்கொண்டு காத்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் பிக்பாஸின் 6வது சீசனில் மக்களின் செல்வாக்கைப் பெற்ற போட்டியாளர்களில் ஏடிகே மிக முக்கியமானவர்.

98 நாள்கள் வீட்டில் இருந்து ஒட்டுமொத்த தமிழக மக்களின் நெஞ்சங்களில் ஆணி போல பதிந்தார். அவர்தான் இப்போது பூர்ணிமாவை ட்ரோல் செய்து ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அப்படியே பூர்ணிமாவுக்கு ஆம்பள வேடம் போட்ட மாதிரி இருப்பதாகவும் ரசிகர்கள்  மேற்கொண்டு கிண்டலடித்து வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ லிங்க்: https://x.com/itzSekar/status/1744926597659099305?s=20

 

google news
Continue Reading

More in Biggboss Tamil 7

To Top