பிக்பாஸ் தமிழின் இந்த வார எலிமினேஷன் இவரா? வட போச்சா? கடுப்பான ரசிகர்கள்..!

by Akhilan |
பிக்பாஸ் தமிழின் இந்த வார எலிமினேஷன் இவரா? வட போச்சா? கடுப்பான ரசிகர்கள்..!
X

Biggboss Tamil: தமிழ் பிக்பாஸ் சீசன் ஏழு டல் அடித்து வரும் நிலையில் இந்த வார எலிமினேஷன் பெரிய அளவில் எதிர்பார்ப்பை கிளப்பி இருந்தது. ஆனால் யாருக்கும் பயனில்லாமல் புஷ்வாணமாக போயி இருக்கும் தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.

கடந்த வாரத்தின் எலிமினேஷன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பூர்ணிமா வெளியேற இருந்த நிலையில் ஐஷு வெளியேறினார். அதுவும் அவர் பெற்றோர் கட்டாயப்படுத்தி அவரை வெளியேற்ற கூறியதாக தகவல்களும் கசிந்து வருகிறது.

இதையும் படிங்க: மண் குடிசை வாசல் என்றால்.. அறம் இயக்குநரின் அடுத்த தரமான படைப்பு!.. கருப்பர் நகரம் டீசர் இதோ!..

இதையடுத்து இந்த வாரத்தின் முதல் சில நாட்கள் செமையாக டல் அடித்தது. நாமினேஷனில் அக்‌ஷயா, சரவண விக்ரம், பூர்ணிமா, டிஜே ப்ராவோ, கானா பாலா, விசித்ரா, மணி உள்ளிட்ட சிலர் நாமினேட் ஆகி இருந்தனர். இதில் வோட்டிங்கில் முதல் நாளில் இருந்து விசித்ரா முதலிடத்தில் இருந்தார்.

ஆனால் அதனை தொடர்ந்து பெரிய கண்டெண்ட் எதுவும் போட்டியாளர்கள் கொடுக்கவே இல்லை. இதை தொடர்ந்து போட்டியாளர்களின் வேறு ஒரு போட்டியாளராக நடிக்க வேண்டும் என ஒரு டாஸ்க் கொடுத்தது. அதில் தினேஷுக்கு ஒரு சீக்ரெட் டாஸ்கும் கொடுக்கப்பட ஆட்டம் சூடுப்பிடித்தது.

இதையும் படிங்க: கருப்பர் நகரத்தில் நடந்த பஞ்சாயத்து!.. அறம் இயக்குனருக்கு இப்படி ஒரு நிலைமையா?!…

அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளாமல் வெளியில் உட்கார்ந்து நேற்றைய நிகழ்ச்சியை சூடுபிடிக்க வைத்தனர். இதனையடுத்து சரவண விக்ரம் இந்த வாரம் வெளியேறுவார் என எதிர்பார்த்த நிலையில், கானா பாலா இந்த வாரம் போட்டியில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ரசிகர்கள் இந்த வாரமும் பூர்ணிமா போச்சா என கமெண்ட் தட்டி வருகின்றனர்.

Next Story