Biggboss Tamil7: தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் தொடங்கி வெற்றிகரமாக நடந்து கொண்டு இருக்கும் நிலையில் நேற்றில் இருந்து அர்ச்சனா ஆடும் ஆட்டம் சுவாரஸ்யத்தினை கிளப்பி இருக்கிறது. இதனால் அவருக்கு வாக்குகளும் குவிந்து வருகிறது.
ப்ரதீப் ஆண்டனியை தொக்காக குழிபறித்து வெறியேற்றியது மாயாவுக்கு கீழ் செயல்படும் Bullygang. அவர்களை நாமினேட் செய்ததால் விசித்ராவிடம் வந்து அவர்கள் ஏற அர்ச்சனா துணையுடன் சண்டை செய்தார். தொடர்ச்சியாக அர்ச்சனா தன்னுடைய ஆட்டத்தினை தொடர்ந்தார்.
இதையும் படிங்க: நடிப்பை பார்த்து வாலி அடித்த கமெண்ட்!.. எம்.ஜி.ஆருக்கு வந்த கோபம்!.. அடுத்து நடந்ததுதான் ஹைலைட்!..
தன்னை நோக்கி வீசிய பலரின் பேச்சுக்களை அசால்ட்டாக கையாண்டார். இதனால் அவருக்கு ஒரு பக்கம் ஆதரவு அதிகரித்தது. இதனால் நேற்று முழு நாளுமே ரசிகர்களுக்கு விருந்தாகவே அமைந்தது. ஐஷு தொடங்கி ஜோவிகா, மாயா, பூர்ணிமா, நிக்சன் என பலரையும் அவர் டீல் செய்த விதம் மிரள வைத்தது.
இதையடுத்து இன்று காலையே மாயா பிரச்னை செய்ய அதற்கு அசராமல் பதில் கொடுத்து அசத்தி இருந்தார். இதனால் வோட்டிங்கிலும் முன்னணி வகுத்து வருகிறார் அர்ச்சனா. இதையடுத்து அவருக்கு ரசிகர்களும் செய்கை செமையா செய்றீங்களே என பாராட்டுக்களை கொடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: பிபி6 வெற்றியாளரை மறைமுகமாக விமர்சித்த கமல்ஹாசன்..! நெத்தியடியாக அடித்த அசீம்..! எங்க திரும்புனாலும் அடி..!
இதனையடுத்து பிக்பாஸ் சீசன் 4ன் வின்னர் ஆரி அர்ஜூனன் தன்னுடைய ஆதரவை ட்வீட் செய்து இருக்கிறார். அதில் அர்ச்சனா உங்க கேமை தொடங்கிட்டீங்க. தைரியமா இருங்க எனக் குறிப்பிட்டு இருந்தார். ஆரியும் தன்னுடைய சீசனில் தனி ஆளாக நின்று பிரச்னையை பேசியதாலே வெற்றி கண்டார். ஆரிக்கு அதிக அளவில் பாசிட்டிவ் விமர்சனங்களே வந்தது.
தற்போதைய சீசன் 7ல் ப்ரதீப் ஆண்டனி தான் பட்டத்தை தட்டுவார் என எதிர்பார்த்து இருந்த நிலையில் தற்போது தினேஷ் இல்லை நேற்று சுறாவளியாக சுழன்று அடித்த அர்ச்சனாவாக தான் இருக்கும் என பேச்சுக்கள் இப்போதே அடிப்பட தொடங்கி இருக்கிறது.
ஆரியின் ட்வீட்: https://twitter.com/Aariarujunan/status/1721781719052026250