Connect with us
pradeep

Biggboss Tamil 7

பிக்பாஸ்: உன்கிட்டலாம் கேட்க முடியாது.. பிரதீப்பை பங்கம் பண்ணிய விஜய்… சைடில் கெடா வெட்டிய நிக்சன்..!

BiggBoss Season7: தமிழ் பிக்பாஸ் சீசன் 7 தொடங்கி இரண்டே நாட்கள் தான் ஆகி இருக்கும் நிலையில் பிரச்னைகள் இப்போதே வீட்டிற்குள் களைக்கட்ட தொடங்கி விட்டது. இன்று காலை வெளியான ப்ரோமோவில் சின்ன பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு யாரும் உதவி செய்ய கூடாது எனக் கூறப்பட்டு இருந்தது.

ஆனால் யுகேந்திரனும், விசித்ராவும் சமையலுக்கு உதவி செய்ததால் அவர்களை சின்ன பிக்பாஸ் வீட்டுக்கு அனுப்புமாறு உத்திரவிட்டார். உடனே ப்ரதீப் அங்கிருந்து இருவரை இங்கே மாற்றுங்க எனக் கூற விசித்ரா கடுப்பானார். எங்க லெவலுக்கு அங்கு யாரும் இருக்காங்களா? அப்படி நீங்க சொல்லலாமா எனக் கடுத்து கொண்டார்.

இதையும் படிங்க: வனிதாவை விட வாய் அதிகமா இருக்கும் போல!.. முதல் நாளிலேயே இத்தனை பேர் நாமினேட் பண்ணியிருக்காங்க!..

இதே பிரச்னை ஊதி பெருசாகி தற்போது ரிலீஸாகி இருக்கும் இரண்டாவது பிரச்னையும் சமையல் கட்டை மையப்படுத்தியே அமைந்துள்ளது. அதில் ப்ரதீப் என்னிடம் கேட்காமல் சப்பாத்தி, குருமா ஏன் செய்ய சொன்னீங்க என சத்தம் போடுகிறார். இதை கேட்டு கடுப்பான விஜய் நேத்து நாங்க பேசுனப்ப இப்படிதான துண்டை ஆட்டிக்கிட்டு இருந்தீங்க.

அப்போ உன்கிட்டலாம் கேட்க முடியாது என ப்ரதீப்பிடம் கடுப்படித்தார். அதே கடுப்பில் நிக்சனிடம் சமைத்து தர கூற கண்ட நேரத்துல சமைத்து கொடுக்க முடியாது என அவரும் சத்தம் போடுகிறார். இதில் கடுப்பான ப்ரதீப் அப்போ நான் கொடுத்த சமையல் பொருளையெல்லாம் கொடு என கோபமாக சொல்கிறார்.

இதையும் படிங்க: துண்டை கட்டிட்டு நடிச்சிட்டு டிரெஸ்ஸிங் பத்தி பேசலாமா?.. விசித்ராவை விளாசிய பிக் பாஸ் பிரபலம்!..

அசீம், பாலா லெவலுக்கு கண்டெண்ட் கொடுக்க இறங்கிய ப்ரதீப்புக்கு பாசிட்டிவ், நெகட்டிவ் என இரண்டு வகையான கமெண்ட்டுகளையும் பார்க்க முடிகிறது. கவின் நண்பர் என்ற போர்வை இல்லாமல் ப்ரதீப் எண்ட்ரி கண்டிப்பாக அவருக்கு வேறு ஒரு பார்வையை கொடுத்திருக்கும் எனவும் பேச்சுகள் அடிப்பட தொடங்கி இருக்கிறது.

google news
Continue Reading

More in Biggboss Tamil 7

To Top