Biggboss Tamil: சரவணனை வெளியில் அனுப்பியது போல அருணை தள்ளுங்க… பொங்கும் பிரபலம்!..
Biggboss Tamil:பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நேற்றைய எபிசோட் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று இருக்கும் நிலையில் தற்போது போட்டியாளரான அருண் சிக்கலில் சிக்கி இருக்கிறார்.
ஏஞ்சல் மற்றும் டிமன் டாஸ்க்
பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சிகள் ரசிகர்களிடம் எப்போதுமே பெரிய ஆதரவு நிலவி வரும். ஆனால் கடந்த இரண்டு சீசன்களாகவே இது ரசிகர்களிடம் அதிருப்தியை தான் ஏற்படுத்தி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் நிகழ்ச்சியின் பெரிய பலமாக இருக்கும் டாஸ்குகள் இல்லாமல் இருப்பதுதான்.
அந்த வகையில் தற்போது எட்டாவது சீசனில் கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ச்சியாக வார டாஸ்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று ஏஞ்சல் மற்றும் டிமன் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் ஏஞ்சலாக இருக்கும் போட்டியாளர்களை வெறுப்பேற்றி அழுக வைத்தோ கோபப்பட வைத்தோ டீமனாக இருக்கும் போட்டியாளர்கள் வெல்ல வேண்டும்.
அப்படி வெல்லும் போட்டியாளர்களுக்கு ஏஞ்சலிடமிருந்து ஒரு இதயம் கிடைக்கும். நிறைய இதயத்தை கலெக்ட் செய்யும் போட்டியாளர்களுக்கு இந்த வார நாமினேஷன் ப்ரீ பாஸ் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றைய போட்டி ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் சுவாரசியத்தை உருவாக்கி இருக்கிறது. 58 நாட்களைக் கடந்திருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று எபிசோடு தான் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் லைக்ஸ் குவித்து வருகிறது.
கோவா கேங் சர்ச்சை பேச்சு
டீமனாக நடித்த போட்டியாளர்கள் ஓவராக ஏஞ்சலாக இருந்தவர்களை வெறுப்பேற்றிக் கொண்டிருந்தனர். இதில் கோபத்தின் உச்சிக்கு சென்ற அன்சிதா தன்னுடைய இதயத்தை பிடுங்கி எறிந்து விட்டு சண்டைக்கு நின்று கத்திக் கொண்டிருந்தார். ஆனால் டீமனாக இருந்தவர்கள் கொடுக்கும் எல்லா டாஸ்குகளையும் பொறுமையாக செய்து கொண்டிருந்தார் பவித்ரா.
இதையும் படிங்க: வாளிப்பான உடம்பு வசியம் பண்ணுது!.. அந்த இடத்த ஓப்பனா காட்டும் கோட் பட நடிகை!…
இந்நிலையில் டாஸ்குகள் நடந்து கொண்டிருந்த போது கோவா கேங் என அழைக்கப்படும் அருண், பவித்ரா, சௌந்தர்யா, ரயன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்பொழுது ரஞ்சித் தன்னை பார்ப்பதாக ரயன் ஜாக்குலிடம் கூறுகிறார்.
இதற்கு ஜாக்லின் அவர் உன் வாயை மட்டுமா பார்க்கிறார் என கொச்சையாக பேச இதைவிட அடுத்த கட்டத்தில் மோசமாக இறங்கி பேசியிருக்கிறார் அருண். சினிமாவில் நடிகைகளை பலவந்தம் செய்யும்போது பார்க்கும் பார்வையாக ரஞ்சித் பார்ப்பதாக பேச அதையும் கேட்டு அருகில் இருந்த போட்டியாளர்கள் கேவலமாக சிரித்துக்கொண்டிருக்கின்றனர்.
கொந்தளித்த பிரபலம்
தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மூன்றாவது சீசனில் தன்னுடைய கல்லூரி காலத்தில் பெண்களை இடித்ததாக கூறிய சரவணன் வார்த்தையை பெரிதுபடுத்தி அவரை நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றினர். இந்நிலையில் தற்போது அருணின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனம் இருந்து வருகிறது.
இதையும் படிங்க: Gossip: விரல் வித்தை நடிகரின் மாஸ் கம்பேக்… நம்பர் நடிகையின் வீழ்ச்சி!… இப்படி ஆகிப்போச்சே!
பிரபல போட்டியாளர் என சனம் ஷெட்டி தன்னுடைய எக்ஸ் வலைதளத்தில் ரேப் ஜோக் பேசும் அருண், அதை கேட்டு சிரிக்கும் நியாயஸ்தர்கள் சௌந்தர்யா, ஜாக்குலின், ரயன். இப்போ வர ரவுடிசம் சண்டைகள் தான் போட்டீங்க தற்போது பேரை கெடுக்கும் வேளையிலும் இறங்கி விட்டீர்களா? கேவலமான யோசனையில் இருக்கும் நீங்க முத்து பத்தி பேச தகுதியே இல்லை.
வீடியோவைக் காண: https://x.com/i/status/1864332658634899820
அருணுக்கு ரெட்கார்ட் கொடுக்க வேண்டும் எனவும் சனம் ஷெட்டி கோரிக்கை வைத்திருக்கிறார். ரசிகர்களும் இந்த விஷயத்தை விஜய் சேதுபதி எப்படி கையாள இருக்கிறார் எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர். வார இறுதி எபிசோட் இருக்கு இன்னும் ஒரு தினமே இருக்கும் நிலையில் இதை விஜய் சேதுபதி கேட்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.