Biggboss Tamil 8: ஏம்மா 'மசாஜ்' பண்றதுக்கா பிக்பாஸ் வந்த?... கழுவி ஊற்றும் ரசிகர்கள்!
Biggboss Tamil: பிக்பாஸ் நிகழ்ச்சியில் கண்டெண்ட் கிடைக்காமல் பிக்பாஸ் அலைந்து கொண்டிருக்கிறார். தொகுப்பாளர் விசே ஒரு பயலும் நம்மள மதிக்க மாட்றான் என்று வருத்தமாக இருக்கிறார்.
ஆனால் பிக்பாஸ் வீட்டில் நடக்கும் பல்வேறு சர்ச்சைகளை இருவரும் தவற விடுகின்றனர். சொல்ல போனால் கடந்த ஏழு சீசன்களை விட இந்த சீசனில் தான் சர்ச்சைகள் அதிகம். ஆனால் இலைமறை காயாக அந்த விஷயத்தை யாரும் கண்டு கொள்வதில்லை.
இதையும் படிங்க: Biggboss Tamil: பிக்பாஸ் போட்டியாளருக்கு ‘அடித்த’ அதிர்ஷ்டம்… என்னன்னு நீங்களே பாருங்க!
இந்தநிலையில் பிக்பாஸ் வீட்டின் சின்ன பெண்ணாக இருக்கும் சாச்சனா செய்யும் வேலைகள் மிகவும் பயங்கரமாக இருக்கின்றன. பெண்கள் அணி, ஆண்கள் அணி என இரண்டு தரப்பினராக பிக்பாஸ் போட்டியாளர்கள் பிரிந்து கிடக்கின்றனர். சாச்சனா பெண்கள் அணியில் இருக்கும் மளிகை சாமான்களை ஆண்கள் அணிக்கு திருடி கொடுக்கிறார். அதோடு மற்றவர்களுக்கு சாப்பாடு ஊட்டி விடும் பழக்கமும் அவரிடம் உள்ளது.
சரி இதெல்லாம் ஏதோ தெரியாமல் செய்கிறார் என்று பார்த்தால் ஆண் போட்டியாளர்களுக்கு மசாஜ் செய்யும் அளவுக்கு முன்னேறி விட்டார். சொல்ல போனால் மேற்கண்ட இரண்டு செயல்களுக்காக பிக்பாஸ் அவரை எச்சரித்தும் அவர் அதை கண்டு கொள்ளவில்லை.
இதைப்பார்த்த ரசிகர்கள் கடையில செயின் திருடுனேன் சொன்னப்பவே வெளியில அனுப்பி இருந்தா இன்னைக்கு இப்படி ஆகியிருக்குமா? என்று சாச்சனா, பிக்பாஸ் இருவரையும் ஒருசேர கழுவி ஊற்றி வருகின்றனர். இதெல்லாம் ரொம்ப தப்புமா!
இதையும் படிங்க: Biggboss Tamil 8: வைல்டு கார்டு போட்டியாளர்களோட ‘சம்பளம்’ இதுதான்!