Biggboss Tamil 8: இந்த வாரம் 'வெளியேறும்' போட்டியாளர் இவர்தான்? ..

by சிவா |
biggboss
X

#image_title

Biggboss Tamil: பிக்பாஸ் சீசன் தற்போது 5௦ நாட்களை கடந்து மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த சீசனில் யாருக்கு கப்பு கிடைத்தாலும் எங்களுக்கு கவலை இல்லை என ரசிகர்கள் வெறுத்து போய், வேறு பக்கம் கரை ஒதுங்கி விட்டனர்.

ஆனந்தி, விஷால், சாச்சனா, அன்ஷிதா,ரஞ்சித், மஞ்சரி, ஜாக்குலின், ரயான், சத்யா,சிவகுமார் ஆகியோர் இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் இடம்பிடித்து இருக்கின்றனர். முன்னதாக இந்த வாரம் டபுள் எவிக்சன் இருக்கலாம் என தகவல்கள் வெளியாகின.

இதையும் படிங்க: 10 சின்ன படம் காலி!. உங்க ரூல்ஸ் ஆர்.ஜே.பாலாஜிக்கு இல்லையா?!.. விளாசும் புளூசட்ட மாறன்!..

ஆனால் அதில் உண்மையில்லை. வழக்கம்போல இந்த வாரமும் சிங்கிள் எவிக்சன்தானாம். மேலே சொன்ன லிஸ்டில் இருந்து மஞ்சரி, சத்யா அல்லது சாச்சனா வெளியேறலாம் என பலரும் கணித்திருந்தனர். என்றாலும் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று கூறும் பிக்பாஸ் அந்தவகையில் தன்னுடைய திருவிளையாடலை காட்டி, இந்த வாரம் வீட்டில் இருந்து ரஞ்சித்தை வெளியேற்றி உள்ளாராம்.

ஆரம்பத்தில் நல்ல கண்டெண்ட் கொடுப்பார் என ரஞ்சித்தை உள்ளே அனுப்பி வைத்த பிக்பாஸ் அவர் பெரிதாக கண்டெண்ட் தரவில்லை என்பதோடு, விளையாட்டிலும் ஆர்வம் காட்டவில்லை என்பதால் வெளியேற்றி உள்ளதாக தெரிகிறது. என்றாலும் கடைசியாக வந்த தகவலின்படி ஆணழகன் சத்யாவும் டேஞ்சர் லிஸ்டில் இருந்து நூலிழை வித்தியாசத்தில் தப்பித்து இருக்கிறார்.

ஒரே நாளில் போட்டியாளரை வெளியேற்றி அதிரடி காட்டிய பிக்பாஸ் தற்போது சாச்சனாவை உள்ளே வைத்து, திருஷ்டி பொம்மை போல அழகு பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு மேல் இந்த சீசனின் டிஆர்பியை அதிகரிக்க யாராலும் முடியாது என்பதால் முடிச்சுட்டீங்க போங்க என ஜென் மோடில் பிக்பாஸ் இருக்கிறாராம். இருங்க பாய் என ஆறுதல் சொல்லத்தான் யாரும் இல்லை என்பது தான் இதில் உச்சகட்ட சோகம்.

Next Story