ப்ரோமோ பொறுக்கியா… அதிரும் பிக்பாஸ் இல்லம்.. தினேஷ்-விஷ்ணு இடையே வெடித்த மோதல்..!

Biggboss Tamil: தமிழ் பிக்பாஸ் ஏழாவது சீசன் இன்றைய ப்ரோமோ பலருக்கு ஆச்சரியத்தினை கொடுத்து இருப்பதாகவே தெரிகிறது. கிட்டத்தட்ட பழைய சீசன்களை ஒப்பிடும் வகையில் செம சண்டை காட்சி நடந்து இருப்பதாக காட்டப்பட்டு இருக்கிறது.

கடந்த சீசன்களில் அதிக சண்டை ஏற்படுவது என்னவோ டாஸ்கினை வைத்து தான். அப்படி டாஸ்கில் எதுவும் தவறாக போய் அவர்கள் அடித்து கொள்வது பார்ப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கும். இதனையே பெரும்பாலும் பிக்பாஸ் ரசிகர்கள் விரும்புவார்கள்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் எனக்கு என்னவெல்லாம் செய்தார் தெரியுமா?!.. எஸ்.பி.பி. பகிர்ந்த சீக்ரெட்..

ஆனால் ஏழாவது சீசன் பிக்பாஸ் தொடங்கியதில் இருந்து பெரிய அளவில் எந்த ஒரு டாஸ்கும் கொடுக்கப்படவே இல்லை. வெறுமனே அவர்கள் பேசிக்கொண்டு இருந்த கண்டெண்ட்டை வைத்தே இத்தனை நாட்கள் ஓட்டினர். அதிலும் இந்தவாரம் அந்த இரண்டு வீடும் இல்லாமல் ஒன்றானது.

பெரிய டாஸ்க் இருக்கும் என எதிர்பார்த்த நிலையில் டாஸ்க் எல்லாம் இல்லை. ஆனால் சண்டை இருப்பதை பிக்பாஸ் ப்ரோமோ வரிசையாக ஓகே செய்து இருக்கிறது. இன்று காலை வெளியான முதல் ப்ரோமோவில் தினேஷை அழைத்து ஒரு சீக்ரெட் டாஸ்க் என பிக்பாஸ் கூறுகிறார். அதையடுத்து விஷ்ணுவுக்கும், தினேஷுக்கும் சண்டை வெடிக்கிறது.

இதையும் படிங்க: ஜோதிகா தான் வேண்டும்..! அசினை திட்டம் போட்டு தூக்கிய சூர்யா..! எந்த படத்தில் தெரியுமா?

ஆனால் எல்லா போட்டியாளர்களிடமும் மற்ற போட்டியாளர்களின் பெயர் டேக் இருக்கிறது. இதனால் இன்னொருவரை பிரதிபலிப்பது போல டாஸ்க் அமைக்கப்பட்டு இருக்கிறது. இதனை வைத்தே அவர்களை கோபப்படுத்துவது தினேஷின் டாஸ்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அது இல்லாமல் சாதாரணமாக பேசுவதை வைத்து இரண்டு பேரும் சண்டை பிடித்தார்களா எனவும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி இருக்கின்றனர். அதை விட அமுல் பேபி, ப்ரோமோ பொறுக்கி என்ற வார்த்தைகளும் சண்டை நடுவில் ஒலிப்பதால் இது கண்டிப்பாக டாஸ்க்கினை வைத்தே இருக்கும். தினேஷ் அவ்வளவு எளிதில் வார்த்தை விட மாட்டாரே என ஈசியாக ரசிகர்களே கண்டித்து இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles
Next Story
Share it