பூகம்பம் டாஸ்கில் மண்ணை கவ்விய பிபி வீட்டார்…! உள்ளே வரப்போகும் வைல்ட் கார்ட்.. ஆட்டம் சூடுபிடிக்குமா?

by Akhilan |
பூகம்பம் டாஸ்கில் மண்ணை கவ்விய பிபி வீட்டார்…! உள்ளே வரப்போகும் வைல்ட் கார்ட்.. ஆட்டம் சூடுபிடிக்குமா?
X

Bigg Boss Tamil: பிக்பாஸ் சீசன் 7ன் இந்த வார பூகம்ப டாஸ்க் ஒரு வழியாக முடிவுக்கு வந்து இருக்கும் நிலையில் ரிசல்ட்டால் இனிமேயாது இந்த சீசன் கொஞ்சம் சூடு பிடிக்குமா? இல்ல இன்னும் மொக்கையாக தான் போகுமா என ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.

நல்லா இருந்த பர்னிச்சரை உடைச்சிட்டீங்களே என்ற ரீதியில் பிக்பாஸில் டாஸ்கே இல்லாமல் 55 நாட்கள் கடந்து விட்டது. இதனால் இனிமேலும் டாஸ்க் வராது என ரசிகர்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். இந்த வார தொடக்கத்தில் வீட்டில் பூகம்பம் 3 டாஸ்க் நடக்கும். அதில் பிபி வீட்டார் வென்றால் போட்டியாளர்கள் நீடிப்பார்கள்.

இதையும் படிங்க: அந்த படம் ஓடாததற்கு காரணமே ஜோதிகாதான்!.. பல வருடங்கள் கழித்து பொங்கும் இயக்குனர்..

இல்லையென்றால் வெளியில் சென்ற போட்டியாளார்கள் மீண்டும் பிபி வீட்டுக்குள் வருவார்கள் என அறிவிக்கப்பட்டது. சரி டாஸ்கெல்லாம் தாறுமாறாக இருக்கும் என நினைத்தால் அங்கயே புஸ்சு தான். எதோ சின்ன பிள்ளைகள் விளையாடும் விளையாட்டை தட்டி கொண்டு வந்து கொடுத்தது பிபி டீம்.

ஆனால் இந்த போட்டியாளர்களோ அசராமல் விளையாடி இரண்டில் கோட்டை விட்டனர். ஒரே போட்டியில் விஷ்ணு மற்றும் ஜோவிகாவினால் ஜெயிச்சனர். இந்நிலையில் இவர்கள் தோற்ற இரண்டு போட்டியால் இரண்டு வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் உள்ளே வர இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: மன்னிப்பு கேட்ட மன்சூர் அலிகான்.. த்ரிஷா என்ன சொல்லிட்டார் தெரியுமா? வைரலாகும் ட்வீட்..!

கிட்டத்தட்ட 8 வாரம் முடிந்து விட்ட நிலையில் மொத்த போட்டியாளர்களும் இன்னும் வீட்டுக்குள்ளே இருப்பதால் கண்டிப்பாக இந்த வார எலிமினேஷன் இருக்கும். அடுத்தடுத்த வாரங்களில் இரண்டு இரண்டு பேராக கூட எலிமினேஷன் நடக்கவே அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவிகிறது.

Next Story