அந்த படம் ஓடாததற்கு காரணமே ஜோதிகாதான்!.. பல வருடங்கள் கழித்து பொங்கும் இயக்குனர்..

ஒரு படம் வெற்றியடைவதற்கு பல காரணங்கள் இருக்கும். அதேபோல், தோல்வி அடைவதற்கும் சில விஷயங்கள் காரணமாக இருக்கும். என்னதான் ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற நடிகர்கள் நடித்தாலும் படத்தின் கதை மற்றும் திரைக்கதை ரசிகர்களை கவரவில்லை எனில் அந்த படம் ஓடாது. இதற்கு பல உதாரணங்களும் உண்டு.
படத்தின் முக்கியமான நேரத்தில் ஒரு முக்கிய காட்சி படத்தின் போக்கையே மாற்றிவிடும். குறிப்பாக செண்டிமெண்ட் காட்சிகளை சொல்லலாம். பிச்சைக்காரன் உள்ளிட்ட பல படங்கள் செண்டிமெண்ட் காட்சிகளால் மட்டுமே ஒடியிருக்கிறது.
இதையும் படிங்க: இந்த வாரம் செம வேட்டை தான் போல… அண்ணன் வரார் வழி விடு.. இந்த வார ஓடிடி அப்டேட்..!
சூர்யா, ஜோதிகா, பூமிகா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து 2006ம் வருடம் வெளிவந்த திரைப்படம் சில்லுன்னு ஒரு காதல். தன்னுடைய கணவன் கல்லூரி காலத்தில் ஒரு பெண்ணை மனம் உருகி காதலித்து அது தோல்வியில் முடிந்ததை தெரிந்துகொண்ட மனைவி, அந்த பெண்ணை தேடி கண்டுபிடித்து கணவருடன் ஒரு நாள் தனியாக அவளை இருக்க வைப்பதுதான் கதை. ஆனால், இந்த படம் ரசிகர்களை கவரவில்லை.
இந்நிலையில், இந்த படத்தை இயக்கிய கிருஷ்ணா ஊடகம் ஒன்றில் பேசும்போது ‘காதலி வீட்டில் இருப்பதை பார்த்த அதிர்ச்சியான சூர்யாவிடம் ‘உன் டைரி படிச்சேன். உனக்கு இது எவ்ளோ கஷ்டம். ஒரு நாள் உனக்கு பிடிச்ச அவ கூட இரு. அதுவரைக்கும் நான் வீட்டில் இருக்க மாட்டேன். நான் உன்னை அவ்ளோ நேசிக்கிறேன்’ என ஜோதிகா வசனம் பேசுவார். அந்த காட்சியில் ஜோதிகா அழுதுகொண்டே நடித்தார். அவர் நடிப்பு சிறப்பாக இருந்ததாக எல்லோரும் கை தட்டினார்கள்.
இதையும் படிங்க: மொத்த யூனிட்டும் எதிர்ப்பு… விடாப்பிடியாக இருந்த பாலசந்தர்… சாதித்துக் காட்டிய வைரமுத்து!
ஆனால் ‘அந்த கதாபாத்திரம் அழக்கூடாது.. மனைவி அழுதுகொண்டே போகும்போது கணவன் எப்படி தன் பழைய காதலியுடன் இருப்பான்’ என சொல்லி ஜோதிகாவை அழாமல் நடிக்க வைத்து அந்த காட்சியை எடுத்தேன். ஆனால், எடிட்டர் உட்பல எல்லோரும் ஜோதிகா அழுது கொண்டே நடித்ததுதான் நன்றாக இருக்கிறது என சொல்ல ஒரு கட்டத்தில் நானே குழம்பிப்போய் சரி அந்த காட்சியே படத்தில் இருக்கட்டும் என விட்டுவிட்டேன்.
ஆனால், தியேட்டரில் அந்த காட்சியில் ரசிகர்கள் சூர்யாவை திட்டினார்கள். ஜோதிகா எமோஷனல் ஆகாமல் அழாமல் இயல்பாக பேசிவிட்டு போயிருந்தால் அந்த படத்தின் தாக்கம் வேறுமாதிரி இருந்து படம் நன்றாக ஓடியிருக்கும். அதுமுதல், இயக்குனராக நான் என்ன நினைக்கிறோனோ அதுதான் இறுதியான முடிவாக இருக்க வேண்டும் என முடிவெடுத்தேன்’ என கிருஷ்ணா கூறினார்.
இதையும் படிங்க: சீனுராமசாமி அப்படி பட்டவர்தான்!… களத்தில் இறங்கி காலி செய்த மனிஷா யாதவ்..