
Cinema News
சீனுராமசாமி அப்படி பட்டவர்தான்!… களத்தில் இறங்கி காலி செய்த மனிஷா யாதவ்..
Seenu ramasamy: கூடல் நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, இடம் பொருள் ஏவல், தர்மதுரை, கண்ணே கலைமானே, மாமனிதன் ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் சீனு ராமசாமி. இவர் பாலுமகேந்திராவின் சிஷ்யன். எனவே, அவரை போலவே இயல்பான கதை, திரைக்கதை, வசனங்கள் மூலம் திரைப்படங்களை எடுப்பவர். விஜய் சேதுபதியை ஹீரோவாக அறிமுகம் செய்து வைத்தவரும் இவர்தான்.
சினிமாவில் பல வருடங்களாக பத்திரிகையாளர் மற்றும் வலைப்பேச்சு யுடியூப் சேனல் பிஸ்மி சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசியபோது ‘சீனு ராமசாமியின் உண்மையான முகம் பலருக்கும் தெரியாது. அவர் இயக்கிய ஒரு படத்தில் மனிஷா யாதவ் நடித்தார். அவருக்கு சீனு ராமசாமி கொடுத்த பாலியல் தொந்தரவால் இந்த படமே வேண்டாம் என ஓடிவிட்டார்’ என சொல்ல அதுபற்றிக்கொண்டது.
இதையும் படிங்க: நீ மாமனிதன் இல்லை!.. இன்று முதல் மாமாமனிதன்!.. இயக்குனர் சீனு ராமசாமியை பங்கம் பண்ணும் புளூ சட்டை!..
இதற்கு பதிலடி கொடுப்பதாக நினைத்த சீனுராமசாமி ஒரு சினிமா விழாவில் மனிஷா யாதவ் அவருக்கு நன்றி சொன்ன வீடியோவை பகிர்ந்து தப்பு நடந்தால் எப்படி எனக்கு அவர் நன்றி சொல்வார் என்கிற ரீதியில் விளக்கம் அளித்திருந்தார். ஆனால், மனிஷா யாதவ் என்னிடம் சீனு ராமசாமி பற்றி போனில் பேசி எல்லாவற்றையும் சொன்னார். இனிமேல் உண்மை வெளியே வரும் என பிஸ்மி கூறியிருந்தர்.
இந்நிலையில், குமுதம் யுடியூப் சேனலுக்கு பிஸ்மி கொடுத்த பேட்டி வீடியோ அந்த சேனலிலிருந்து அது நீக்கப்பட்டுவிட்டது. இதற்கு பின்னணியில் சீனுராமசாமி இருப்பதாக சொல்லப்படுகிறது. ஒருபக்கம் இந்த விவகாரத்தை கையிலெடுத்த புளூசட்ட மாறன் சீனுராமாசமியை கிழிகிழியென கிழித்து கொண்டிருக்கிறார். நீ மாமனிதன் இல்லை.. மாமா மனிதன்’ என பதிவிட்டார்.
இதையும் படிங்க: நடிகைகளை பத்திரமாக பார்த்து கொள்வதில் மாமனிதன்.. சீனு ராமசாமியை சூப்பரா சீண்டிய ப்ளூ சட்டை மாறன்!..
மேலும், உங்கள் மீது தவறு இருப்பதால்தானே வீடியோவை நீக்க சொல்லி இருக்கிறீர்கள். வெளியே பரம யோக்கியன் வேஷம். உள்ளுக்குள்ள கில்மாத்தனம். உன்னால எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டார்களோ.. உன்கிட்ட வாய்ப்பு கேட்டு வந்த ஒரு பொண்ணு நீ பண்ண வேலையில வெளியே அழுதுக்கிட்டே ஓடிச்சாமே. இவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுங்க’ என டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், நடிகை மனிஷா யாதவ் ‘வேறு ஒரு படம் தொடர்பான விழா மேடையில் அவர் கொடுத்த பரிசுக்கு நன்றி சொன்னேன். அது எல்லோருக்கும் சொல்வதுதான். அதனால் அவர் எனக்கு செய்தது எப்படி மாறும்?.. 9 வருடங்களுக்கு முன் அவரை பற்றி நான் என்ன சொன்னேனே இப்போதும் அதில் உறுதியாக இருக்கிறேன். என்னை மரியாதை குறைவாக நடத்திய ஒருவரின் இயக்கத்தில் நான் ஏன் நடிக்க வேண்டும்?.. சீனு ராமசாமி உண்மையை ஒத்துக்கொள்ளுங்கள்’ என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
தன் மீதான குற்றச்சாட்டை சீனுராமசாமி மறுத்த நிலையில் சம்பந்தப்பட்ட நடிகையே அது உண்மைதான் என சொல்லி இருப்பது இந்த விவகாரத்தை சூடுபிடிக்க வைத்துள்ளது. மனிஷா யாதவ் வழக்கு எண் 18/9 என்கிற படத்தில் அறிமுகமானார். அதன்பின் ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம், பட்டய கிளப்பு பாண்டியா, திரிஷா இல்லனா நயன்தாரா, ஒரு குப்பைக்கதை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: மனிஷா யாதவுக்கு டார்ச்சர் கொடுத்தேனா?.. வீடியோ ஆதாரத்தை போட்டு சீனு ராமசாமி கொடுத்த பதிலடி!..