மீண்டும் ரசிகர்களுக்கு பல்ப் கொடுத்த பிக்பாஸ் டீம்… மாயா சேவ்… எதிர்பாராத எலிமினேஷன்..!

by Akhilan |
மீண்டும் ரசிகர்களுக்கு பல்ப் கொடுத்த பிக்பாஸ் டீம்… மாயா சேவ்… எதிர்பாராத எலிமினேஷன்..!
X

Biggboss Tamil7: தமிழ் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக ஓடிக்கொண்டு இருக்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 இறுதிக்கட்டத்தை நெருங்கி கொண்டு இருக்கிறது. கிட்டத்தட்ட இன்னுமுமே பல போட்டியாளர்கள் உள்ளே இருக்கின்றனர். இந்த வார எலிமினேஷில் யார் வெளியேறுவார் என்ற ஆச்சரிய தகவல் வெளியாகி இருக்கிறது.

பொதுவாக ஒரு பிக்பாஸ் சீசனில் ஒரு போட்டியாளர் மீது மட்டுமே நெகட்டிவிட்டி இருக்கும். ஆனால் இந்த சீசனில் தான் இருக்கும் எல்லா போட்டியாளர்கள் மீதும் ரசிகர்கள் கடுப்பில் இருக்கின்றனர். அப்படி ஒரு கட்டத்தில் இந்த சீசனுக்கான் பார்வையாளர்களும் வெகுவாக குறைந்து இருக்கின்றனர்.

இதையும் படிங்க: கோபி புருஷனா தோத்து இருக்கலாம்… ஆனா நல்ல அப்பா தான் போலயே… ஃபீல் பண்ண வச்சிட்டாருப்பா!

இந்த வார எலிமினேஷனில், மாயா, நிக்‌ஷன், ரவீனா, தினேஷ், மணி, விஷ்ணு ஆகியோர் நாமினேட் ஆகி இருந்தனர். இதில் மாயா அல்லது நிக்‌ஷன் வெளியேற வேண்டும் என்று தான் ரசிகர்கள் விருப்பப்பட்டனர். அதிலும் பைனலுக்கு நேரடியாக செல்லும் டிக்கெட் டூ பைனல் டாஸ்கிலும் இவர்கள் ஜெயித்து விடக்கூடாது என்பதையே ரசிகர்களின் எண்ணமாக இருந்தது.

சில அதிகாரப்பூர்வமற்ற வோட்டிங்கில் கூட இவர்கள் தான் கடைசி இடத்தில் இருக்கிறார்கள். அதனால் கண்டிப்பாக இருவரில் ஒருவர் எலிமினேட் ஆகவே அதிக வாய்ப்பு என ஆவலாக காத்திருந்தனர். இந்நிலையில் அவர்களுக்கு பதில் ரவீனா எலிமினேட் செய்யப்பட்டு இருப்பதாகவே தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இதையும் படிங்க: அடங்கப்பா.. நம்புங்கையா.. தவசி படத்துக்கு சீமானா வசனம்? உண்மையை உடைத்த இயக்குனர்..!

இந்த வார டிடிஎஃப் டாஸ்கில் நிறைய முறைகேடுகள் வேறு நடந்து இருக்கிறது. அதனால் இன்னும் வெற்றியாளர் அறிவிக்கப்படவில்லை. யார் அது என்பதுடன் இந்த எலிமினேஷன் அறிவிப்பும் வர இருப்பதால் வீக் எண்ட்டுக்கு ரசிகர்கள் வெயிட்டிங்கில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story