Bigg Boss Tamil 8
Biggboss Tamil: பிக்பாஸில் இந்த வாரம் அந்த பிரபல டாஸ்க்கா? அப்போ அதிரடி சரவெடிதான்!.. மிஸ் பண்ணாதீங்கப்பா
Biggboss Tamil: பிக் பாஸ் தமிழ் சீசன் 8-ல் இந்த வாரம் நடக்க இருக்கும் டாஸ்க் குறித்த சுவாரசிய தகவல்கள் கசிந்திருக்கிறது.
போர் அடிக்கும் பிக் பாஸ் சீசன் 8
பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடம் எப்போதுமே பெரிய அளவில் வரவேற்பு இருக்கும். ஆனால் எந்த முறை பல இடங்களில் ரசிகர்கள் அதிருப்தியை சந்தித்து வருகின்றனர். இதற்கு முறையான போட்டியாளர்கள் தேர்வு இல்லாததை காரணம் என கூறப்படுகிறது.
அது மட்டும் அல்லாமல் நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசன் இல்லாமல் அவரின் இடத்தையும் விஜய் சேதுபதியால் நிரப்ப முடியாமல் தடுமாறி வருகிறார். நிகழ்ச்சிக்கு கண்டெண்ட் கொடுக்கிறேன் என அவர் கேட்கும் சில கேள்விகள் பார்க்கும் ரசிகர்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதையும் படிங்க: இளையராஜாவுக்கும் ஒரு லவ் ஃபெயிலர் ஸ்டோரி இருக்கு!.. அது யாருன்னு தெரியுமா?…
இந்த வார இறுதியில் அவர் மஞ்சரிடம் நடந்து கொண்டதும் பலரிடம் கேள்விக்குறியாக மாறி இருக்கிறது. இதுவரை இந்த சீசனில் விஜய் சேதுபதியின் பேச்சுக்கள் ஓரளவு நிகழ்ச்சிக்கு டிஆர்பி பெற்றுக் கொடுத்து வந்த நிலையில் தற்போது அதுவும் அடிவாங்கி இருக்கிறது.
மீண்டும் வார டாஸ்குகள்
பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றி என்றால் ஒவ்வொரு வாரமும் நடத்தப்படும் டாஸ்குகள்தான். ஏதாவது ஒரு கதாபாத்திரம் கொடுத்து போட்டியாளர்களை அது போல் நடந்து கொள்ள சொல்வது ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வந்தது.
அதுதான் பல சீசன்களின் வெற்றியாகவும் அமைந்தது. விடிய விடிய தூங்காமல் டாஸ்குகள் செய்த சீசன்கள் இன்றளவும் ரசிகர்களிடம் நல்ல ரீச்சை பெற்று இருக்கிறது. ஒருவழியாக தற்போது பிக் பாஸ் சீசன் 8 அதை மீண்டும் கையில் எடுத்திருக்கிறது. இந்த வகையில் கடந்த வாரம் ராஜா ராணி டாஸ்க், பள்ளி டாஸ்க் நடத்தப்பட்டது.
இதையும் படிங்க: காவாலா பாடலில் நான் செய்தது தப்பு!. பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே தமன்னா!…
இந்நிலையில் இந்த வாரம் மீண்டும் ஏஞ்சல் மற்றும் டிமன் டாஸ்க் நடக்க இருப்பதாக தகவல்கள் கசிந்து இருக்கிறது. கடந்த சில சீசன்களாக இந்த டாஸ்க் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு சீசனிலும் இந்த டாஸ்க் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று இருக்கிறது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல் பாலா மற்றும் சனம் இடையேயான சண்டை, ஆறாவது சீசனில் தனலட்சுமி மற்றும் அசீம் இடையேயான சண்டை உள்ளிட்ட முக்கிய எபிசோடுகள் இந்த டாஸ்குகளில் தான் நடந்திருக்கிறது. இந்நிலையில் இந்த வாரம் பிக் பாஸ் சீசன் 8ல் இந்த டாஸ்க் எப்படி நடக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.