Biggboss Tamil 8: இந்த வாரம் வெளியேறிய 'போட்டியாளர்' யாருன்னு பாருங்க!

by சிவா |
biggboss
X

#image_title

Biggboss Tamil: பிக்பாஸ் சீசன் தற்போது 5௦ நாட்களை கடந்துள்ளது. இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் ஆனந்தி, விஷால், சாச்சனா, அன்ஷிதா,ரஞ்சித், மஞ்சரி, ஜாக்குலின், ரயான், சத்யா,சிவகுமார் ஆகியோர் இடம்பிடித்து இருக்கின்றனர். முன்னதாக இந்த வாரம் டபுள் எவிக்சன் இருக்கலாம் என தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால் சிங்கிள் எவிக்சன் என்பது உறுதியாகி விட்டது. இதற்கு மேல் வைல்டு கார்டு போட்டியாளர்களை உள்ளே இறக்கும் திட்டம் பிக்பாஸ்க்கு இல்லையாம்.

இந்தநிலையில் இந்த வாரம் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. சிவாஜி குடும்பத்தின் வாரிசும், முதல் சீசன் பிக்பாஸ் போட்டியாளர் சுஜா வருணியின் கணவருமான சிவக்குமார் தான் அந்த போட்டியாளர்.

இதையும் படிங்க: Kanguva: சூர்யாவுக்கு சொந்தக்காரன் திருப்பூர் சுப்பிரமணியன்.. கங்குவா குறித்து ராதாரவி பளீச்

வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே சென்ற சிவகுமார் பெரிதாக எந்த கண்டெண்டும் கொடுக்கவில்லை. ஜாலியாக பிக்னிக் சென்றது போல சுற்றிப்பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர் இருக்கும் இடத்தை பிக்பாஸ் ஆள் வைத்து தேடி கண்டுபிடித்து ப்ரோமோ போடும் நிலையில் தான் சிவாவின் நடவடிக்கைகள் உள்ளன.

இதனால் இந்த வாரம் டேஞ்சர் லிஸ்டில் சத்யா, ரஞ்சித் இருந்தபோதும் பிக்பாஸ் சிவகுமாரை வீட்டில் இருந்து வெளியேற்றி இருக்கிறார். ரியா, வர்ஷினி லிஸ்டில் இந்த வாரம் சிவகுமார் இணைந்துள்ளார். ஆக இந்த சீசன் வைல்டு கார்டு போட்டியாளர்கள் எதுவும் பெரிதாக செய்யவில்லை என்பது இதில் இருந்து தெரிகிறது. படமொன்றில் காமெடியாக ஒரு வசனம் வரும். மொத்தமும் ஜோக்கரா இருந்தா எப்புடி? அப்படித்தான் தற்போது பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் இருக்கின்றனர்.

sivakumar

#image_title

ஆரம்பத்தில் பெர்பார்ம் செய்த முத்துக்குமரன், ஜாக்குலின் போன்றோரையும் விஜய் சேதுபதி அடக்கி விட்டதால் தற்போது அவர்களும் அடங்கி விட்டனர். மொத்தத்தில் இப்போது ஜாக்குலின், சவுந்தர்யா, முத்துக்குமரன், மஞ்சரி என சில போட்டியாளர்களை வைத்துத்தான் பிக்பாஸ் கண்டெண்ட் தேத்த வேண்டிய நிலைமைக்கு ஆளாகி இருக்கிறார்.

ஒரு நேரம் ஓவராக வேலைபார்த்து எந்த கண்டெண்டை எடுத்து போடுவது என தெரியாமல் இருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது ஒரே சீசனில் அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. மீண்டு வருமா? என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க: பாலிவுட் என்ட்ரி!.. மும்பை புரமோஷனில் ஓபனாக பேசிய அல்லு அர்ஜுன்.. அப்படி என்ன சொன்னாரு?..

Next Story