பிக்பாஸ் சீசன் 8ல் போட்டியாளர்கள் லிஸ்ட்… நாங்க பாவமில்லையா!

by Akhilan |   ( Updated:2024-08-26 12:39:03  )
பிக்பாஸ் சீசன் 8ல் போட்டியாளர்கள் லிஸ்ட்… நாங்க பாவமில்லையா!
X

#image_title

BiggbossTamil: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நாள் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தோராய லிஸ்ட் இணையத்தில் கசிந்து இருக்கிறது.

மற்ற சீசன்களைப் போல அல்லாமல் இந்த சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சி கண்டிப்பாக விறுவிறுப்புடன் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 7 சீசன்களை கமல்ஹாசன் தொகுத்து வந்த நிலையில் இந்த சீசனில் அவர் வெளியேறியிருக்கிறார். அவருக்கு பதில் விஜய் சேதுபதி இந்த சீசனை தொகுத்து வழங்க இருக்கிறார்.

இதையும் படிங்க: இப்டி டிரெஸ் போட்டு மனச கெடுக்குறாரே மாளவிகா!.. சீயானும் செம ஸ்டைலா இருக்காரே!…

கமல்ஹாசன் போல இல்லாமல் விஜய் சேதுபதி கண்டிப்பாக ரசிகர்களிடம் பெரிய ஆதரவை பெறுவார் என்றே டிவி நிர்வாகம் எதிர்பார்க்கிறது. அந்த வகையில் மேலும் பரபரப்பை அதிகரிக்கும் விதமாக நிகழ்ச்சியின் போட்டியாளர்களும் வைரல் புகழில் இருப்பவர்களாக வேண்டும் என்பதே தயாரிப்பு நிறுவனத்தின் குறிக்கோளாக அமைந்திருக்கிறது.

bbtamil8

அந்த வகையில் தற்போது இணையத்தில் தோராய லிஸ்ட் ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து வழக்குகளில் சிக்கி வரும் யூட்யூபர் டிடிஎஃப் வாசன், குக் வித் கோமாளியால் புகழ்பெற்ற நடிகை ஷாலின் சோயா, நடிகர் ரியாஸ்கான், இந்தியன் 2 படத்தில் நடித்திருந்த ஜெகன், பூனம் பாஜ்வா கலந்து கொள்ளலாம்.

இதையும் படிங்க: காதலனை மிரட்டிய மேகா ஆகாஷ்… இதனால்தான் இந்த திடீர் திருமண அறிவிப்பா?

மேலும், விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளர் மாகாபா ஆனந்த், காமெடியன் குரோஷி, பாரதி கண்ணம்மா நடிகர் அருண்பிரசாத், பாக்கியலட்சுமி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் ரஞ்சித், பிரபல யூட்யூபர் அமலா ஷாஜி, நடிகை ஆனந்தி, ப்ரீத்தி முகுந்தன், சம்யுக்தா உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

இது தோராயமான லிஸ்ட் என்றாலும் இதில் பல பிரபலங்கள் கண்டிப்பாக நிகழ்ச்சியில் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டு குரோஷி உள்ளிட்ட போட்டியாளர்கள் மாற்றப்படலாம் எனவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். விரைவில் நிகழ்ச்சி தொடங்கியிருக்கும் நிலையில் இவர்களில் யார் வருவார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Next Story