அங்க சுத்தி இங்க சுத்தி… ஷாருக்கான் தலையிலே கை வைத்த மீடியா… அடே எப்படி தெரிது என்னப்பாத்தா?
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் எல்லா மொழி ரசிகர்களுக்குமே பிடிக்கும் ஒரு ஆள் கண்டிப்பாக ஷாருக்கானாக தான் இருப்பார். அவரின் படங்களுமே பல மொழிகளில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யும் போது தொடர் வசூலையும் பெறும்.
பாலிவுட் நாயகர்களின் எல்லா படங்களும் ப்ளாப்பான நேரத்தில் பல வருடம் கழித்து ஷாருக் நடித்த திரைப்படம் தான் பதான். இப்படி மிகப்பெரிய வசூலை செய்தது. அப்படி ஒரு வெற்றியை தந்த ஷாருக் அடுத்து தமிழில் இருந்து அட்லீயை தன்னுடைய படத்தின் இயக்குனராக்கினார்.
இதையும் படிங்க: நான் எழுதின பாட்ட கண்ணதாசன்னு நினைச்சார் எம்.ஜி.ஆர்!. வாலி சொன்ன சீக்ரெட்!..
நாயகியாக நயன்தாராவையும், வில்லனாக விஜய் சேதுபதியையும், இசையமைப்பாளராக அனிருத்தையும் சேர்த்தார். இதனால் இந்தியை தாண்டி இந்தபடத்துக்கு தமிழில் எதிர்பார்ப்பு அதிகரித்தது. இப்படத்தினை வரும் செப்டம்பரில் ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். சென்னையில் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி வைத்து கொண்டாடி இருக்கின்றனர்.
இந்நிலையில் எல்லா பிரபலங்களுக்கு திடீரென ஒரு புரளி கிளம்பும். அவர்கள் இறந்து விட்டார்கள் என்று எல்லா மீடியாவும் பேசுவார்கள். அதே சர்ச்சையில் ஷாருக்கும் சிக்கி இருக்கிறார். 2017ல் யூரோப் இருக்கும் நியூஸ் சேனல் ஒன்று பாரிஸ் நடந்த விபத்தில் ஷாருக்கானுடன் அவரின் உதவியாளர்கள் 7 பேர் இறந்து விட்டதாக பத்த வைத்து விடுகின்றனர்.
இதையும் படிங்க: ஆசையாக கேட்ட கிங்காங்… அட இதுக்கென்ன கேள்வி? அசால்ட்டு காட்டிய ஷாருக்கான்!
இந்த செய்தி காட்டுத்தீயாக பரவுகிறது. இந்திய மீடியாக்கள் இந்த செய்தியின் உண்மைத்தன்மையை அறிய மன்னர் வீட்டுக்கு செல்கின்றனர். அங்கு சென்றால் ஷாருக்கானை காண 1000 ரசிகர்களுக்கு மேல் அங்கு கூடி விடுகின்றனர். மரண வதந்தியை விடுத்து இந்த செய்தியை மீடியாக்கள் பரப்புகிறது.
இந்த நேரத்தில் ஷாருக்கான் புனேவில் இருந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு திடீர் விபத்து ஏற்படுகிறது. ஷாருக் உடனே தன்னுடைய சமூக வலைத்தளங்களில் நான் நலமுடன் இருக்கிறேன் என ட்வீட் செய்தார். இருந்தும் ரசிகர்கள் நம்ப மறுத்தனர். உடனே லைவ்வில் வந்து ரசிகர்களிடம் பேசினார். அதை தொடர்ந்து 2 நாட்கள் கழித்து மன்னர் வீட்டில் காட்சியளித்து ரசிகர்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார்.