அவரு சூர்யாவுக்கு மட்டுமில்ல!.. தமிழ் சினிமாவுக்கே ரொம்ப ஆபத்து!.. பொங்கி எழுந்த பிஸ்மி..!

by ramya suresh |
bismi
X

bismi

தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் சூர்யாவிற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் சினிமாவிற்கும் ஆபத்து என்று சினிமா விமர்சகர் பிஸ்மி தெரிவித்து இருக்கின்றார்.

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கடுமையான விமர்சனங்களை சந்தித்த திரைப்படம் கங்குவா. இயக்குனர் சிறுத்தை சிவா இரண்டு வருடங்களாக இந்த திரைப்படத்தை எடுத்து வந்தார். மேலும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா இந்த திரைப்படத்தை தயாரித்திருந்தார்.

இதையும் படிங்க: ஒரே நாளில் மூணு ஹீரோ வாழ்க்கையில் நடந்த அதிரடி திருப்பங்கள்… இத கவனிச்சீங்களா?

சூர்யாவின் கெரியவில்லையே மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் கடுமையான விமர்சனங்களை சந்தித்த காரணத்தால் தோல்வி அடைந்தது. இந்த திரைப்படத்தின் தோல்விக்கு ரசிகர்களின் தேவையற்ற விமர்சனங்கள் தான் காரணம் என்றும், சினிமா விமர்சகர்கள் இந்த திரைப்படத்தை திட்டம் போட்டு தோல்வி அடைய செய்து விட்டார்கள் என்று தொடர்ந்து சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் கூறி வருகிறார்கள்.

அதிலும் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் ஆரம்பத்தில் இருந்து சொல்லி வரும் கருத்து என்னவென்றால் படத்தை திட்டமிட்டு இரண்டு நடிகர்களின் ரசிகர்கள் காலி செய்து விட்டார்கள் என்பது தான். இந்நிலையில் இந்த கருத்துக்கு பிரபல சினிமா விமர்சகர் பிஸ்மி தனது கருத்தை கூறியிருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது: 'தனஞ்செயன் போன்ற நபர்கள் சூர்யா போன்ற நடிகர்களுக்கு மட்டுமல்ல, தமிழ் சினிமாவுக்கும் ஆபத்தானவர்கள் தான்.

ஒரு நடிகர் தவறு செய்யும்போது அதில் இருக்கும் தவறை எடுத்துக் கூறி அந்த தவறை சரி செய்து கொள்ளும்படி அறிவுரை கூற வேண்டும். ஆனால் அந்த நடிகரிடம் நீங்கள் தவறு எதுவும் செய்யவில்லை. தவறு செய்தது எல்லாம் மற்றவர்கள் தான் என்று கூறும் போது அந்த நடிகர் தனது தவறை எப்படி திருத்திக் கொள்வார். ஒரு படத்தை பொறுத்தவரை அந்த படத்தில் கதை மற்றும் திரைக்கதை சிறப்பாக இருக்க வேண்டும்.

கங்குவா படத்தில் படத்தின் கதை மற்றும் திரைக்கதை என்ன சிறப்பாக இருந்தது. அதை விட்டுவிட்டு மற்ற இரண்டு நடிகர்களின் ரசிகர்களையும், இரண்டு கட்சிகளின் தொண்டர்களும் தான் திட்டமிட்டு கங்குவா படத்தை தோல்வி படமாக மாற்றி விட்டார்கள் என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம். அவர் எந்த இரண்டு கட்சிகளை கூறுகின்றார் என்பது பலருக்கும் தெரியும். இரண்டு ரசிகர்கள் என்று அஜித் ரசிகர்களையும், விஜய் ரசிகர்களையும் தான் கூறுகிறார்.

kanguva

kanguva

உண்மை ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். விஜய் மற்றும் அஜித் போன்ற நடிகர்களுக்கு இணையான நடிகர் சூர்யா கிடையாது. அப்புறம் எப்படி அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் சூர்யா படத்தை காலி செய்ய வேண்டும் என்று முயற்சி செய்வார்கள். இருக்கும் நிலவரப்படி முதல் இடத்தில் இருப்பது விஜய். அதற்கு அடுத்த இடத்தில் ரஜினியும், அதற்கு அடுத்த இடத்தில் அஜித்தும் இருந்து வருகிறார்கள்.

இதில் சூர்யா பின் தங்கி தான் இருக்கின்றார். இன்னும் கூறப்போனால் கடந்த 11 வருடங்களில் பெரிய அளவு வெற்றியை கொடுக்காத நடிகராக சூர்யா இருந்து வருகின்றார். அப்படி பார்த்தால் விஜய் ரசிகர்களும் அஜித் ரசிகர்களும் சூர்யா படத்தை காலி செய்ய வேண்டும் என்கின்ற எந்த ஒரு அவசியமும் கிடையாது. ஒருவேளை தனஞ்ஜெயன் கூறுவது சரி என்று வைத்துக் கொண்டாலும், கேரளாவிலும், ஆந்திராவிலும் கங்குவா படத்தை யார் தோல்வி படமாக மாற்றினார்கள்.

இதையும் படிங்க: விஜயகாந்த் மகனை வைத்து ஒரு படம்!.. சசிக்குமார் கொடுத்த சூப்பர் அப்டேட்!…

இவர் சொல்லுவது அபாண்டமான கருத்து என்பது அனைவருக்கும் தெரியும். இது சூர்யாவுக்கு தெரியுமா என்பது தெரியவில்லை. தனஞ்செயன் கூறுவது அனைத்துமே பொய். இதை சூர்யா புரிந்து கொண்டால் இது போன்ற ஜால்ராக்களை ஒதுக்கி வைத்து விட்டு சிறந்த திரைப்படத்தில் நடிப்பதை மட்டும் கவனத்தில் கொண்டு நடிப்பார்' என்று கூறி இருக்கின்றார் பிஸ்மி. இந்த கருத்து தற்போது வைரலாகி வருகிறது.

Next Story