ஒரே நாளில் மூணு ஹீரோ வாழ்க்கையில் நடந்த அதிரடி திருப்பங்கள்… இத கவனிச்சீங்களா?
Kollywood: சமீப காலமாகவே கோலிவுட் நட்சத்திரங்கள் செய்வது ரசிகர்களிடம் விமர்சிக்கப்பட்ட வருவது வழக்கமான கதையாக மாறி இருக்கிறது. அந்த வகையில் தற்போது ஒரே நாளில் மூன்று பிரபலங்கள் தங்களைப் பற்றி பேச வைத்திருக்கிறார்கள்.
இந்த வருடம் தொடக்கத்தில் இருந்து பிரபல கோலிவுட் நட்சத்திரங்கள் தங்களுடைய விவாகரத்தை வரிசையாக அறிவித்து வந்தனர். இந்த ஆண்டு பிரபலங்களின் திருமணத்தை விட விவாகரத்து செய்திதான் ரசிகர்களிடம் அதிகமாக பேசப்பட்டது.
இதையும் படிங்க: என்னது! விடாமுயற்சியில த்ரிஷா இவ்வளவு நேரம்தான் வருவாங்களா?.. இதுக்கா இம்புட்டு அக்கப்போரு!..
அந்த வகையில் தற்போது ஒரே நாளில் மூன்று பிரபலங்கள் தங்களை குறித்து ரசிகர்களை பேச வைத்துள்ளனர். முதலில் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஜோடி. 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பிரிவதாக அறிவித்தனர்.
இருந்தும் ரஜினிகாந்த் மற்றும் கஸ்தூரிராஜா தரப்பு தொடர்ச்சியாக இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறது. ஆனால் எதுவும் எடுபடாத வகையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருவரும் முறையாக நீதிமன்றம் படி ஏறி விவாகரத்தை வழக்காக பதிவு செய்தனர்.
இந்நிலையில் கடந்த வாரம் நடந்த விசாரணையில் தங்களால் இணைந்து வாழ முடியாது என அவர்கள் திட்டவட்டமாக கூறிவிட்ட நிலையில் அதிகாரப்பூர்வமாக இருவரின் திருமண வாழ்க்கையை முறித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதையும் படிங்க: சூர்யாவுடன் ஸ்ரேயா சரண்!.. குத்து பாட்டு கன்ஃபார்மா?.. வெளியான சூப்பர் அப்டேட்!..
இதே நாளில் சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட சித்தார்த் மற்றும் அதிதி இருவரும் இரண்டாவது முறையாக ராஜஸ்தானில் உள்ள அலியா கோட்டையில் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டிருக்கின்றனர். இது குறித்த புகைப்படங்களை தங்களுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட அதிதி மற்றும் சித்தார்த்தத்திற்கு இதுதான் அவர்களின் திருமணத்திற்கான முதல் ஆசையாக இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.