சூர்யாவுடன் ஸ்ரேயா சரண்!.. குத்து பாட்டு கன்ஃபார்மா?.. வெளியான சூப்பர் அப்டேட்!..
சூர்யா 44 படத்தில் நடிகை ஸ்ரேயா சரண் நடனமாடி இருந்த நிலையில் இது தொடர்பான அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கின்றது.
தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த நடிகராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் நடிகர் சூர்யா. வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து அதில் மெனக்கட்டு நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்துபவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் கங்குவா. இப்படம் ரசிகர்களிடையே கடுமையான விமர்சனங்களை சந்தித்தது.
இதையும் படிங்க: Keerthy Suresh: அப்பா வெங்கடாசலபதி கல்யாணம் நல்லபடியா நடக்கனும்.. திருப்பதியில் கீர்த்தி சுரேஷ்
கடந்த இரண்டு வருடங்களாக சிறுத்தை சிவா இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார். நடிகர் சூர்யாவும் எந்த திரைப்படத்திலும் கவனம் செலுத்தாமல் கடந்த இரண்டு வருடங்களாக கங்குவா படத்திற்காக மெனக்கெட்டு நடித்திருந்தார். ஆனால் அதற்கான பலன் அவருக்கு கிடைக்கவில்லை என்று தான் கூற வேண்டும். படம் வெளியானது முதலே தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை சந்தித்த காரணத்தால் தோல்வி அடைந்தது.
சூர்யாவின் கெரியரிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான திரைப்படம் கங்குவா. ஆனால் இந்த படத்தின் தோல்வி நடிகர் சூர்யாவுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. இருப்பினும் அடுத்தடுத்த திரைப்படங்களில் கவனமாக நடித்து வருகின்றார் சூர்யா. அந்த வகையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44 என்ற திரைப்படத்தில் கமிட்டாகி நடித்து வருகின்றார்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஏறத்தாழ முடிவடைந்து விட்டது. இதற்கு அடுத்ததாக ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கின்றார். இப்படத்தின் பூஜை கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
இதையும் படிங்க: என்னது! விடாமுயற்சியில த்ரிஷா இவ்வளவு நேரம்தான் வருவாங்களா?.. இதுக்கா இம்புட்டு அக்கப்போரு!..
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 44 திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அந்தமானிலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஊட்டியிலும் நடைபெற்றது. சமீபத்தில் இடுக்கியில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. அதில் நடிகை ஸ்ரேயா சரண் சூர்யாவுடன் இணைந்து ஒரு குத்துப் பாடலுக்கு நடனமாடி இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.
இதனை சமீபத்தில் நடிகை ஸ்ரேயா சரண் உறுதிப்படுத்தியிருந்தார். இந்நிலையில் இந்த பாடல் மிகச் சிறப்பாக உருவாகி இருப்பதாகவும், டிசம்பர் மாதம் இந்த பாடல் வெளியாகும் என்றும் அவர் கூறியிருக்கின்றார். இது சூர்யா ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.