Keerthy Suresh: அப்பா வெங்கடாசலபதி கல்யாணம் நல்லபடியா நடக்கனும்.. திருப்பதியில் கீர்த்தி சுரேஷ்
Keerthy Suresh: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழும் கீர்த்தி சுரேஷ்சுக்கு அடுத்த மாதம் திருமணம் நடக்க இருக்கும் வேளையில் இன்று அவர் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார். அது சம்பந்தமான வீடியோ தான் தற்போது வைரலாகி வருகின்றது. இதுவரை கீர்த்தி சுரேஷ், அவருடன் 15 வருட காலம் பழகிய நண்பருடன் திருமணம் செய்யப் போவதாக செய்திகள் பரவிய நிலையில் சமீபத்தில்தான் அதை உறுதிப்படுத்தி இருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தன் காதலனுடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டு கூடிய சீக்கிரம் ஒன்று சேரப் போகிறோம் என்பது போல தன்னுடைய பதிவில் வெளியிட்டு இருந்தார் கீர்த்தி சுரேஷ். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கீர்த்தி சுரேஷ் தமிழில் 2015 ஆம் ஆண்டு இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானார்.
இதையும் படிங்க: குடும்பத்துக்கே ஷாக்கா? கோபியை தேடும் ராதிகா… பாண்டியனின் மனமாற்றம்
அதனைத் தொடர்ந்து பைரவா, ரஜினி முருகன், சர்க்கார் ,அண்ணாத்த போன்ற பல படங்களில் நடித்து ஒரு தவிர்க்க முடியாத நடிகையாக மாறினார் .யாரும் எதிர்பாராத ஒரு நடிப்பை மகாநதி திரைப்படத்தின் மூலம் வெளிப்படுத்தி இருந்தார் கீர்த்தி சுரேஷ். அந்த படத்திற்காக அவருக்கு தேசிய விருதும் வழங்கப்பட்டது. நடிகை சாவித்திரியின் கதாபாத்திரத்தை அற்புதமாக ஏற்று அந்த படத்தில் நடித்திருந்தார்.
தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாளம் போன்ற படங்களில் பிசியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் அடுத்ததாக ஹிந்தியிலும் கால் பதித்திருக்கிறார். தமிழில் பிளாக்பஸ்டர் வெற்றியடைந்த தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கான பேபி ஜான் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாக இருக்கிறார். இந்த நிலையில் இன்று அவர் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த போது பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்திருந்தார்.
இதையும் படிங்க: பிரபல பாலிவுட் நடிகருடன் கிசுகிசுக்கப்படும் சமந்தா.. உண்மையா இருந்தா ஹேப்பி
அப்போது ஹிந்தி ப்ராஜெக்ட் பேபி ஜான் படத்திற்காகவும் என்னுடைய கல்யாணத்திற்காகவும் தான் வந்தேன் என்று கூறியிருந்தார். அப்போது கல்யாணம் எப்போது எங்கே என கேட்டபோது அடுத்த மாதம் கோவாவில் நடைபெற இருக்கிறது என மிகவும் சந்தோஷமாக கூறி சென்றார் கீர்த்தி சுரேஷ்.
இதோ அந்த வீடியோ லிங்க்: https://www.instagram.com/reel/DC8dpsZqoLp/?igsh=MWZydXBmYnh3eWZndQ==