கருப்பு எம்.ஜி.ஆர் யார் என தற்போதுள்ள இளைஞர்கள் வரை பலரிடம் கேட்டாலும் அனைவரும் கூறும் ஒரே பதில் விஜயகாந்த் பெயராக தான் இருக்கும். எம்.ஜி.ஆர் வீட்டிற்கு அவரை பார்க்க சென்றால் வெறும் வயிற்றுடன் வீடு திரும்ப மாட்டோம் என்கிற நம்பிக்கை எந்தளவுக்கு மக்களுக்கு இருந்ததோ, அதே நம்பிக்கையை மக்கள் விஜயகாந்த் மீதும் வைத்திருந்தனர்.
அதனால் தான், நடிப்பை தாண்டி , அவர் அரசியலுக்குள் நுழைந்த பின்னர் குறுகிய காலத்திற்குள் யாரும் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு முன்னேறி சென்றார். அவருடன் பழகிய பலரும் தற்போதும் கூறுவதுண்டு. என்னவென்றால் அவர் உடல் நிலை நன்றாக இருந்திருந்தால் இந்நேரம் அவர் தான் தமிழக முதல்வர் என கூறுவதுண்டு.
ஆனால், கடந்த சில வருடங்களாக அவரது உடல்நிலை மிகவும் மோசமாகி தற்போது வெளியுலகில் இருந்து ஒதுங்கியே இருக்கிறார் புரட்சி கலைஞர் விஜயகாந்த். இவரை பற்றி இவரை வைத்து சில சூப்பர் ஹிட் படங்ளை இயக்கியவரும், இவரது நெருங்கிய நண்பருமான லியாத் அலிகான் அண்மையில் ஓர் சுவாரஸ்ய தகவலை கூறினார். இவர் விஜயகாந்தை ஹீரோவாக வைத்து ஏழை ஜாதி, எங்க முதலாளி போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார்.
கருப்பு எம்.ஜி.ஆர் என்கிற பட்டத்தை நான்தான் வழங்கினேன். ரசிகர்கள் கூடியிருந்த ஒரு கூட்டத்தில் நான் உரையாற்றியபோது, ஒரு கதை கூறினேன். அதாவது, பிரம்மன் இவரை படைக்க உத்தரவிட்ட போது, இவருக்கு அள்ளிக்கொடுக்கும் கரங்கள், ஏழைகளுக்கு உருகும் மனது, தமிழருக்கு குரல் கொடுக்கும் குணம் அனைத்தையும் படைத்தான். பிறகு அவன் என் கண்ணே பட்டுவிடும் ஆதாலால், இவரை சிகப்பாக படைக்க வேண்டாம் கருப்பாக படித்துவிடுங்கள் என கூறிவிட்டான் என கூறினேன்.
இதையும் படியுங்களேன் – மீண்டும் மீண்டுமா.?! பாலிவுட்டில் ரிஸ்க் எடுக்க தயாரான சூர்யா.! ஆண்டவன் தான் காப்பாத்தணும்.!
மேலும், ஏற்கனவே சிகப்பாக ஒரு எம்.ஜி.ஆரை படித்துவிட்டேன். தற்போது அதே போல குணம் கொண்ட கருப்பு எம்.ஜி.ஆரை படைத்துவிட்டான் பிரம்மன் என கூறினாராம். அதற்கடுத்து அப்படியே பல நாளிதழ்களில் கருப்பு எம்.ஜி.ஆர் என பதிவிட்டுவிட்டனராம். இதனை லியாத் அலிகான் அவர்கள் ஒரு வீடியோவில் தெரிவித்தார்.
கடந்த 2021…
தமிழ் சினிமாவில்…
பிரபல சினிமா…
Nayagan: மணிரத்னம்…
நடிகை பார்வதி…