Cinema News
மாஸ்டர் படமே காப்பிதான்!. எல்.சி.யூன்னா இதுதான்!. லோகேஷை பங்கம் செய்த புளூசட்ட மாறன்..
மாநகரம் படம் மூலம் இயக்குனராக மாறியவர் லோகேஷ். முதல் படத்திலேயே சினிமா துறையினரிடன் பாராட்டுக்களை பெற்றார். அடுத்து அவர் இயக்கிய கைதி திரைப்படமும் ரசிகர்களை மிகவும் கவந்தது. ஒரு பாடல் காட்சி கூட இல்லாமல் ஒரு இரவில் நடக்கும் கதைக்கு விறுவிறுவென திரைக்கதை அமைந்திருந்தார்.
இந்த படம் நல்ல வசூலை பெற்றது. மூன்றாவதாக அவர் இயக்கிய படம்தான் மாஸ்டர். விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான இந்த படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டாக அமைந்தது. எனவே, 4வது படத்தில் கமலுடன் கை கோர்த்தார் லோகேஷ் கனகராஜ். அப்படி உருவான திரைப்படம்தான் விக்ரம்.
இதையும் படிங்க: இவங்க எந்த லெவலுக்கும் போவாங்க!.. விடமாட்டேன்!.. டிவிட்டரில் பொங்கிய திரிஷா….
கமல், விஜய் சேதுபதி, பஹத்பாசில் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்த இந்த படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்ததோடு லோகேஷுக்கு ரசிகர்களையும் பெற்று தந்தது. லோகேஷ் இயக்கும் படங்களை எல்.சி.யூ (Lokesh Cinematic Universe) என அவரின் ரசிகர்கள் சொல்ல துவங்கினார்கள்.
அதாவது லோகேஷின் முந்தைய படங்களில் வந்த கதாபாத்திரங்கள் அடுத்த படத்திலும் வருவதைத்தான் அப்படி சொல்ல துவங்கினார்கள். 5வதாக மீண்டும் விஜயை வைத்து லியோ படத்தை இயக்கினார் லோகேஷ். இந்த படம் ஆங்கில படமான A History of violence படத்தின் தழுவல் என சொல்லப்பட்டது. இதை லோகேஷும் மறுக்கவில்லை.
லியோ படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இரண்டாம் பாதி சரியாக இல்லை என பலரும் கூறினார்கள். இதை லோகேஷும் ஏற்றுக்கொண்டார். அடுத்து ரஜினியை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கவிருக்கிறார். இதற்கு திரைக்கதை அமைக்கும் வேலையில் லோகேஷ் ஈடுபட்டிருக்கிறார்.
இந்நிலையில், விஜயை வைத்து அவர் இயக்கிய மாஸ்டர் படம் மம்முட்டி நடிப்பில் 1989ம் வருடம் வெளிவந்த முத்ரா படத்தின் அப்பட்டமான காப்பி என சொல்லி சிலர் வீடியோ ஆதாரங்களோடு சமூகவலைத்தளங்களில் பதிவிட்டனர். முத்ரா படத்தில் இடம் பெற்றிருந்த பல காட்சிகள் அப்படியே மாஸ்டர் படத்திலும் இருந்தது. விஜய்க்கு பொருந்துவது போல் அந்த காட்சிகள் கொஞ்சம் மாற்றப்பட்டிருந்தது.
இந்நிலையில், பிரபல தமிழ் டாக்கிஸ் யுடியூப் விமர்சகர் புளூசட்ட மாறன் இது தொடர்பாக வைரலாகி வரும் மீம்ஸை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து LCU – Lokesh Copy Universe என பதிவிட்டு நக்கலடித்துள்ளார். இது தொடர்பாக லோகேஷ் விரைவில் தனது கருத்தை தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.