விடுதலை 2-வில் வரலாற்றை திரித்து காட்டியிருக்கிறாரா வெற்றிமாறன்?!... பொங்கும் பிரபலம்!...

#image_title
தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். நாவல்களை சிறப்பாக சினிமாவாக மாற்றுவார். சில தேசிய விருதுகளையும் வாங்கி இருக்கிறார். இப்போது விடுதலை 2 படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் டிரெய்லர் வீடியோ சமீபத்தில் வெளியானது. அதில், வரும் சில வசனங்கள் வரலாற்றை திரித்து காட்டியிருப்பதாக புளூசட்ட மாறன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
கதை நடக்கும் காலகட்டம் கலைஞர் மற்றும் எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலம் போல தெரிகிறது. ஈழ விடுதலை போராட்டத்தை வேறு வடிவில் எடுத்திருக்கிறார் வெற்றிமாறன். இதில் விஜய் சேதுபதிக்கு பெருமாள் எனும் 'பிரபாகரன்' வேடம். ‘என்னை மாதிரி ஒருத்தன் தண்டவாளத்துல தலை வச்சி படுத்ததாலதான் உன்னை மாதிரி ஒருத்தன் படிச்சிட்டு வந்து இங்க உக்காந்து இருக்க’ என டிரைலரில் இளவரசு பேசும் வசனம் யாரை குறிக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும்.

MGR2
ஆனால் தமிழகத்தில் பல ஆயிரம் ஆரம்ப, உயர்நிலை பள்ளிகளை திறந்து, மதிய உணவு போட்டு, பல தலைமுறை பட்டதாரிகளை உருவாக்கியவர் காமராஜர் என்பதை மறைக்கவோ, மறுக்கவோ இயலாது. இதை உங்கள் படத்தில் பதிவு செய்துள்ளீர்களா?..
தத்துவம் இல்லாத தலைவர்களால் ரசிகர்களை மட்டுமே உருவாக்க முடியும். அது முன்னேற்றத்துக்கு வழிவகுக்காது என ஒரு வசனம் வருகிறது. இது விஜயை என பலரும் நினைக்கிறாரக்ள். ஆனால் உண்மை அதுவல்ல. அவரிடம் பல முரணான கொள்கை தத்துவங்கள் உள்ளன.
இந்த வசனம் எம்..ஜி.ஆரை கிண்டல் செய்கிறது. நமக்கு ஒரே கேள்விதான். உயர்வான தததுவங்களை கொண்டு மக்கள் விரோத ஆட்சி செய்யும் தலைவர்கள் உயர்ந்தவர்களா? அல்லது தத்துவம் இல்லாவிட்டாலும் சொந்த உழைப்பில் சம்பாதித்த தனது சொத்துக்களை பிறருக்கு தானம் செய்தவர் உயர்ந்த தலைவரா?..

MGR Kalaignar
உங்கள் ஹீரோ பெருமாள் தன் மக்கள் விடுதலைக்கு போராடியபோது உதவிக்கரம் நீட்டியது எம்.ஜி.ஆர் என்பதை படத்தில் பதிவு செய்துள்ளீர்களா அல்லது மறைத்து விட்டீர்களா?.. தத்துவம் இல்லாத தலைவர் என சொல்பவர்களுகு தனது இதயவீணை படத்தில் வரும் ‘காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர்’ பாடலில் ‘சத்தியம்தான் நான் படித்த புத்தகம் அம்மா. சமத்துவம்தான் நான் அறிந்த தத்துவம் அம்மா’ என அன்றே பதிலடி தந்தவர் எம்.ஜி.ஆர்.
பல கொள்கை, தத்துவங்களை வைத்துக்கொண்டு மக்களுகு நல்லது செய்யாமல் இருப்பதை விட, போலி தத்துவம் இல்லாமல் மக்கள் தொண்டாற்றும் தலைவரே மேல் என மக்கள் முடிவு செய்ததால்தான் வெற்றிகளை மட்டுமே பெற்ற ஒரே அரசியல் தலைவராக இருந்திருக்கிறார் எம்.ஜி.ஆர்’ என மாறன் பதிவிட்டிருக்கிறார்.
இதையும் படிங்க: விஜய் கட்சிக்கு அஜீத் ஆதரவு… சிம்பாலிக்கா சொல்லி தெறிக்க விட்டுட்டாரே…!