ஃபன்னி கய்ஸ்!. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உண்மையான வசூல் இதுதான்!.. முகத்திரையை கிழித்த பிரபலம்!..
jigarthanda: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடித்து தீபாவளி ரிலீஸாக வெளிவந்த திரைப்படம்தான் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். ஜிதர்தண்டா படம் 2014ம் வருடம் வெளியானது. இதில், பாபி சிம்ஹா, சித்தார்த் ஆகியோர் நடித்திருந்தனர்.
இந்த படம் சூப்பர் ஹிட் அடித்து கார்த்தி சுப்புராஜை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. கிட்டத்தட்ட 9 வருடங்கள் கழித்து இப்படத்தின் இரண்டாம் பாகம் போல ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். அதேநேரம், இந்த படத்தின் கதை ஜிகர்தண்டா பட கதைக்கு முந்தையை காலகட்டத்தில் நடப்பது போல எடுத்திருக்கிறார்.
இதையும் படிங்க: சார் ஒரு ஆயிரம் ரூபாய் கொடுங்க!.. பல வருடங்களாக லோகேஷ் ஃபாலோ பண்ணும் செண்டிமெண்ட்!..
அதாவது, ஜிகர்தண்டா படத்தில் வரும் சேது கதாபாத்திரத்திற்கு ஒரு அப்பா இருந்திருந்தால் எப்படி இருக்கும் என யோசித்து ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை இயக்கியிருக்கிறார். இப்படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றி பெற்றுள்ளது. மேலும், ரஜினி உட்பட திரைத்துறையை சேர்ந்த பலரும் இப்படத்தை பாராட்டியிருந்தனர்.
தீபாவளிக்கு இதோ படத்தோடு சேர்ந்து கார்த்திக் நடித்த ஜப்பான் படமும் வெளியானது. ஆனால், அந்த படம் ரசிகர்களை கவரவில்லை. அதனால் பாக்ஸ் ஆபிஸில் அப்படம் தோல்வி அடைந்துவிட்டது. ஒருபக்கம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் நல்ல வசூலையும் பெற்றுவருவதாக சொல்லப்பட்டதோடு, இப்படத்தின் வெற்றி விழாவையும் படக்குழு கொண்டாடியது.
இதையும் படிங்க: நான் கமலை வச்சி எடுத்த படத்துக்கு இளையராஜா இசை!.. பல வருஷம் கழிச்சி ஷங்கர் பகிர்ந்த சீக்ரெட்!..
இந்நிலையில், ஜப்பான் படம் ரூ.32 கோடி வசூல் எனவும், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் வெளியாகி 9 நாட்கள் ஆகியுள்ள நிலையில் இப்படம் ரூ.52 கோடியை வசூல் செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியானது. இதைத்தொடர்ந்து பிரபல யூடியூபரும், சினிமா விமர்சகருமான புளூசட்டமாறன் இந்த தகவலை கிண்டலடித்துள்ளார்.
ஜப்பான் படம் அட்டர் பிளாப். ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பி மற்றும் சி செண்டர்களில் படம் எடுபடவில்லை. பெரிய நகரங்கள் மற்றும் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் மட்டுமே ஓரளவு வசூலை பெற்றுள்ளது. ஆனால், படம் பெரிய வசூலை பெற்றது போல பொய்யான தோற்றத்தை உருவாக்கி சக்ஸஸ் மீட் நடத்துகிறார்கள். பேட்டி கொடுக்கிறார்கள்.
இவர்கள் எவ்வளவு பொய்யை சொன்னாலும் உண்மை இதுதான். 32, 52,102,302 என பல கோடிகளை சொல்லுங்க.. very funny என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மகனுக்காக களத்தில் இறங்கிய அண்ணாமலை…பேரம் பேசிய விஜயா..! சிறகடிக்க ஆசையில் சூப்பர் ட்விஸ்ட்..!
COPYRIGHT 2024
Powered By Blinkcms