சார் ஒரு ஆயிரம் ரூபாய் கொடுங்க!.. பல வருடங்களாக லோகேஷ் ஃபாலோ பண்ணும் செண்டிமெண்ட்!..
Lokesh kangaraj: வங்கியில் பணிபுரிந்து வந்தவர் லோகேஷ் கனகராஜ். யாரிடமும் உதவி இயக்குனராக வேலை செய்து சினிமாவை கற்றுக்கொள்ள இவருக்கு சூழ்நிலையும் இல்லை. ஆர்வமும் இல்லை. எனவே, அவரே கதை எழுதி குறும்படங்கள் எடுக்க துவங்கினார். அதன்பின் சில கதைகளை எழுதினார்.
பல தயாரிப்பாளர்களை சந்தித்து கதையை சொல்லி வாய்ப்பு கேட்டார். யாரும் அவரை நம்பவில்லை. அப்போதுதான், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு அவரை நம்பினார். அப்படி உருவான திரைப்படம்தான் ‘மாநாகரம்’. முதல் படத்திலேயே ஆச்சர்யம் கொடுத்தார். சென்னையில் ஒரு நாள் நடக்கும் கதைக்கு அசத்தலாக திரைக்கதை அமைத்திருந்தார்.
இதையும் படிங்க: அப்பவே சொன்ன விஜய்!. ஆர்வக்கோளாறில் கேட்காத லோகேஷ் கனகராஜ்!. இப்ப ஃபீல் பண்ணி என்ன பன்றது!..
அதற்கு பின் கைதி, மாஸ்டர், விக்ரம் என டேக் ஆப் ஆனார். இதில், விக்ரம் படம் அவருக்கென தனி ரசிகர் கூட்டத்தையே உருவாக்கிவிட்டது. இவர் இயக்கும் படங்களில் காட்டப்படும் விஷயங்கள் ரசிகர்களுக்கு புதிதாக இருப்பதால் அதை எல்.சி.யூ என சொல்கிறார்கள்.
விஜயை வைத்து லோகேஷ் எடுத்த லியோ படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியானது. இப்படம் எதிர்மறை விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூலை பெற்றது. அடுத்து ரஜினியை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார். அதற்கான கதை விவாதங்களில் அவர் ஈடுபட்டுள்ளார்.
இதையும் படிங்க: கைதி பட கிளைமேக்ஸ் சீனை அங்க இருந்துதான் சுட்டேன்!.. ஓப்பன ஒத்துகொண்ட லோகேஷ்!..
லோகேஷ் வங்கியில் வேலை செய்தபோது அந்த வங்கியில் மேலதிகாரியாக இருந்த கணேசன் என்பவர்தான் லோகோஷின் முதல் குறும்படத்தை தயாரித்திருக்கிறார். அதற்கு அவர் லோகேஷுக்கு கொடுத்த சம்பளம் 3 ஆயிரம் ரூபாய். ’எதிர்காலத்தில் நீ எவ்வளவு சம்பளம் வாங்கினாலும் முதல் சம்பளம் கொடுத்தது நானாக இருக்கட்டும்’ என கணேசன் சொன்னாராம்.
இதுபற்றி ஒரு ஊடகம் ஒன்றில் பேசிய லோகேஷ் ‘எனக்கு முதல் சம்பளம் கொடுத்தது அவர்தான். இப்போதும் கூட நான் ஒவ்வொரு படம் துவங்கும்போதும் அவரிடம் சென்று ‘சார் ஒரு ஆயிரம் ரூபா கொடுங்க சார்’ என கேட்டு வாங்கி கொண்டு வருவேன்’ என சொல்லியிருந்தார். 3 ஆயிரம் வாங்கிய லோகேஷ் இப்போது ரு.50 கோடி சம்பளம் வரை உயர்ந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இனி எல்லா படத்துலையும் இது இருக்கும்… திட்டவட்டமாக சொன்ன லோகேஷ்.. இதை லியோவில் கவனிச்சீங்களா..?