லியோதான் அதிக வசூல் பண்ணும்!.. காண்டாக்கும் புளூசட்டமாறன்.. இது என்னடா தலைவருக்கு வந்த சோதனை!..

by சிவா |   ( Updated:2023-07-27 14:20:09  )
bluesatta
X

நடிகர் ரஜினிக்கு கடந்த சில வருடங்களாகவே ஒரு சூப்பர் ஹிட் படம் அமையவில்லை. சந்திரமுகிக்கு பின் அவர் நடிப்பில் வெளியான படங்கள் எதுவுமே ரசிகர்களை கவரவில்லை. இதில், பேட்ட படம் மட்டும் ஓரளவுக்கு ஓடியது. கடைசியாக வெளியான தர்பார், அண்ணாத்த போன்ற படங்கள் ரசிகர்களை ஏமாற்றியது. எனவே, எப்படியாவது ஒரு வெற்றிப்படத்தை கொடுக்க வேண்டும் என நெல்சனுடன் கூட்டணி அமைத்து ஜெயிலர் படத்தில் ரஜினி நடித்துள்ளார்.

jailer

ஒருபக்கம் விஜய்தான் அடுத்த சூப்பர்ஸ்டார் என பலரும் பேச துவங்கிவிட்டனர். விஜய் இதுபற்றி எதுவும் பேசாமல் இருப்பது ரஜினி தரப்புக்கும் கோபத்தை ஏற்படுத்தியது. அதனால்தான் ஜெயிலர் பட பாடலில் ‘‘இவன் பேர தூக்க நாலு பேரு.. பட்டத்தை பறிக்க நூறு பேரு.. குட்டி செவத்தை எட்டி பார்த்தா உசுர கொடுக்க கோடி பேரு’ என வரிகள் வந்தது.

இதையும் படிங்க: சின்ன பொண்ணுங்க தான் வேணும்!.. அடம்பிடிக்கும் 70 வயது நடிகர்.. அப்போ ரம்யா பாண்டியன்.. இப்போ யாரு தெரியுமா?

இந்த பாடல் வரிகளை ரஜினியும் மிகவும் ரசித்ததால்தான் அந்த பாடலாசிரியரை அழைத்து பாராட்டினார். அதேபோல், விரைவில் நடக்கவுள்ள ஜெயிலர் படத்தின் ஆடியோ விழாவிலும் ரஜினி சூப்பர்ஸ்டார் விவகாரம் பற்றி பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் ஜெயிலர் படம் மூலம் தான் யார் என நிரூபிக்கும் கட்டாயத்தில் ரஜினி இருக்கிறார்.

இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் ரஜினியை கடுமையாக கிண்டலுக்கும் பிரபல யுடியூப் சினிமா விமர்சகர் புளூசட்ட மாறன் ‘இவற்றில் எந்த படம் அதிக வசூல் செய்யும்?’ என கேள்வி கேட்டு ஒரு ஃபோல் ஒன்றை நடத்தினார். அதில், ஜெயிலர், லியோ, இந்தியன் 2, விடாமுயற்சி என நான்கு திரைப்படங்கள் கொடுக்கப்பட்டிருந்தது. முடிவில், லியோ படத்திற்கு 68.9 சதவீதம் பேரும், ஜெயிலர் படத்திற்கு 9.8 சதவீத பேரும் வாக்களித்திருந்தனர். அதேபோல், இந்தியன் 2 என 10.5 சதவீதம் பேரும், விடாமுயற்சி என 10.8 சதவீதம் பேரும் வாக்களித்திருந்தனர்.

poll

poll

ரிசல்ட்டை பார்க்கும்போது ஜெயிலரை விட லியோ படத்திற்கு ரசிகர்களிடம் அதிக வரவேற்பு இருக்கிறது நமக்கு புரிகிறது. காரணம் லோகேஷ் கனகராஜ் இயக்குனர் என்பதுதான் முக்கிய காரணமாக இருக்கும் என கணிக்கப்படுகிறது.

ஆனாலும் ஜெயிலர் படத்தை ரஜினி ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ஜெயிலர் படம் ரசிகர்களை கவர்ந்தால் சூப்பர் ஹிட் அடித்து பல கோடிகளை வசூல் செய்யும் என்பதில் சந்தேகமே இல்லை.

இதையும் படிங்க: ‘அவ்வை சண்முகி’க்கே டஃப் கொடுக்கும் ரோல் : இந்தியன் 2-வில் மிரட்டப்போகும் லேடி கெட்டப்!…

Next Story