Rajinikanth: பொதுவாக சினிமா நடிகர்கள் தாங்கள் நடிக்கும் படங்களில் பேசும் வசனங்களை நிஜ வாழ்வில் பின்பற்றுவார்கள் என சொல்ல முடியாது. உதாரணத்திற்கு சத்தியராஜுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனால், சினிமாவில் தலை மற்றும் உடலில் திருநீரால் பட்டை போட்டுக்கொண்டு பக்திமானாக நடிப்பார்.
ஏனெனில் நடிப்பு என்பது அவரின் தொழில் அவ்வளவுதான். எம்.ஜி.ஆர் போன்ற சில நடிகர்கள் மட்டுமே நிஜ வாழ்வில் எப்படி இருப்பார்களோ அப்படி சினிமாவிலும் நடிப்பார்கள். சில மாஸ் ஹீரோக்கள் சினிமாவில் பன்ச் வசனங்களை பேசுவார்கள். சமூகபிரச்சனைக்கு எதிராக குரல் கொடுப்பார்கள் அதெல்லாம் கேமரோவோடு சரி.
இதையும் படிங்க: மீண்டும் அரசியலா?.. லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் என்ன சொல்ல வருகிறார்?..
நிஜவாழ்வில், சமூகத்தில் நடக்கும் எந்த பிரச்சனைக்கும் குரல் கொடுக்க மாட்டார்கள். மாயான அமைதியில் இருப்பார்கள். ஆனால், விசிலடிச்சான் குஞ்சிகளுக்கு இது புரியாது. தன் தலைவன் சினிமாவில் எப்படியோ அப்படித்தான் நிஜ வாழ்விலும் தப்பை தட்டி கேட்பான் என கற்பனை செய்து கொள்வார்கள். ஆனால், அது எப்போதுமே நடக்காது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி, விஷ்ணு விஷால் உள்ளிட்ட பலரும் நடித்து உருவாகியுள்ள லால் சலாம் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இந்த டீசரின் ஒரு காட்சியில் ‘விளையாட்டில் ஏன் மதத்த கலக்குறீங்க’ என ரஜினி ஆவேசமாக வசனம் பேசியிருப்பார்.
ஒருபக்கம், உலக கிரிக்கெட் போட்டி நடைபெறும் நிலையில் இந்தியா மற்றும் நியூஸ்சிலாந்து அணி ஆடும் அரை இறுதி ஆட்டத்தை காண ரஜினி மும்பைக்கு போனார். இதைத்தொடர்ந்து புதிய படங்களை விமர்சனம் என்கிற பெயரில் கிழித்து காயப்போடும் புளூசட்டமாறன் டிவிட்டரில் ‘விளையாட்டுல மதத்தை கலக்காதீங்க என ஆக்ரோஷத்துடன் எச்சரிப்பதற்காக மும்பையில் நடக்கும் மேட்ச்சை காண சென்றுள்ளார் தலீவர்’ என வடிவேல், பசுபதி காமெடி போட்டோவை போட்டு கலாய்த்துள்ளார்.
இதையும் படிங்க: ரஜினியின் சூப்பர் ஹிட் பட ரீமேக்!. அந்த நடிகர் மட்டுமே நடிக்க முடியும்!.. அட இயக்குனரே சொல்லிட்டாரே!..