மீண்டும் அரசியலா?.. லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் என்ன சொல்ல வருகிறார்?..

by sankaran v |
மீண்டும் அரசியலா?.. லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் என்ன சொல்ல வருகிறார்?..
X

lalsalam rajni

Rajinikanth: அரசியலுக்கு நான் வருவேன் என்று சொல்லிய ரஜினிகாந்த் திடீர் என்று பல்டி அடித்து வரமாட்டேன் என்று சொல்லி இருந்தார். தற்போது அவர் நடித்த லால் சலாம் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இந்த டீசரைப் பார்க்கும் போது அரசியல் பேசுவது போல உள்ளது. இதுகுறித்து பிரபல யூடியூபர் ஆலங்குடி வெள்ளைச்சாமி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

லால் சலாம் படம் ஒரு வருஷத்திற்கு முன்பு தொடங்கப்பட்டது. சிறப்புத் தோற்றத்தில் ரஜினிகாந்த் நடிக்க, அவரது மகள் ஐஸ்வர்யா இயக்குகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார். கதாநாயகனாக விஷ்ணு விஷால் நடிக்கிறார். இந்தப் படத்தில் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் கேரக்டரில் வருகிறார்.

விக்ராந்த், லிவிங்ஸ்டன், செந்தில், கே.எஸ்.ரவிகுமார், தம்பி ராமையா உள்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தைப் பற்றி அறிவித்ததுமே பலவகையான கலவையான விமர்சனங்களை சந்தித்தது. ரஜினி சிறப்புத் தோற்றத்தில் நடித்தால் அந்தப் படம் பெரிசா போகாதுன்னு சொல்லப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட படக்குழு ரஜினிகாந்தை ஹீரோவாகவும், விஷ்ணு விஷாலை 2வது கதாநாயகனாகவும் மாற்றியது. அதற்கேற்ப கதையை மாற்றி அமைத்தது.

தற்போது படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இதன் ஆரம்பத்தில் கிரிக்கெட் போட்டி நடக்கிறது. அங்கு இது வெறும் கிரிக்கெட் இல்ல. போர் என்று அறிவிக்கிறார்கள். ரஜினிகாந்த் வரும்போது கிரிக்கெட்ல ஏன்யா மதத்தைக் கலக்குறீங்க... குழந்தைங்க மனசுல கூட விஷத்தை விதைச்சிருக்கீங்கன்னு கேட்கிறார்.

Rajni2

லால் சலாம்னா உலகளாவிய 2 கம்யூனிஸ்ட்டுகள் சந்தித்தால் சொல்லும் வார்த்தை. இதற்கு வணக்கம் என்று தான் அர்த்தம். இது கம்யூனிஸ்ட்டுகளுக்கான படமா என்று கேட்டால் அதற்கான வாய்ப்புகள் இல்லை. இது விளம்பர யுக்தியாகவும் இருக்கலாம். ஒருவேளை அப்படியும் காட்சிகள் இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

ரஜினி பாஜகவில் சேரப்போவதாக சில செய்திகள் வந்தன. அப்போது அவர் பாஜகவில் வரமாட்டார் எனவும் செய்திகள் வந்தன. அவர் ஒருபோதும் பாஜகவில் சேருவேன் என சொல்லவில்லை. அவருடைய நடவடிக்கைகள் அப்படி இருந்தன. இன்று ஆசியாவிலேயே நம்பர் ஒன் ஹீரோவாக ரஜினி உயர்ந்துள்ளார்.

இந்த டீசர் கிரிக்கெட் அரசியலைப் பேசுகிறது. இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் கிரிக்கெட் விளையாடும் நாடுகள். பாகிஸ்தானோடு விளையாடினால் மட்டும் அது பெரிதாகப் பார்க்கப்படுகிறது. இங்கு வெறும் எல்லைப் பிரச்சனை தான் இருக்கிறது. ஆனால் இலங்கையுடன் விளையாடினால் அந்த அளவு எதிர்பார்ப்பு இல்லை. ஆனால் நம் இனத்தில் பல்லாயிரம் பேரைக் கொன்றது இலங்கை தான்.

இந்தப் படம் அரசியலைப் பேசுகிறதா...? ஏன்னா இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் இல்ல. போர் என்ற வசனமும் டீசரில் வருகிறது. ரஜினி மக்கள் அரசியலை இந்தப் படத்தில் பேசுவாரா என்றும் கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இவரைப் போல உச்சபட்ச நடிகர்களுக்கு என்னென்ன நெருக்கடிகள் இருக்கும் என்றும் சொல்ல முடியாது.

அது அவர்களுக்குத் தான் தெரியும். டீசர் அரசியல் பேசுவது ஒரு பரபரப்புக்காக கூட வைத்திருக்கலாம். ஆனால் படம் என்ன சொல்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Next Story