Cinema News
கோட் படத்தை பார்க்கப் போனா நீங்கதான் ஆடு!.. மண்ட பத்திரம்!.. புளூசட்டமாறன் விமர்சனம்!…
வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான படம் கோட். படத்தின் ஹீரோ ஆண்டி டெரரிஸ்ட் ஸ்க்வாடா இருக்காரு. அவரால வில்லன் குடும்பம் பாதிக்கப்பட்டுருக்கு. இதுக்குப் பழிவாங்கணும்னு ஹீரோவோட மகனைக் கடத்தி அவனை பெரிய ஆளா ஆக்கி ஹீரோக்கு எதிராகவே திருப்பி விடுறார் வில்லன். இதுக்கு அப்புறம் என்ன நடக்குதுங்கறது தான் கதை. ஆனா விஷூவலா என்ன வந்துருக்கும்னு ஆர்வம் வரும்.
ஆனா நாம ஊகிக்கிறதை விட படம் கேவலமாகத் தான் வந்துருக்கு. ஒரு படம் எப்படியாப்பட்டதுன்னு பார்க்குறதுக்கு முழு படத்தைப் பார்க்கத் தேவையில்லை. முதல் சீனைப் பார்த்தாலே தெரிஞ்சிடும். இதுல முதல்ல கென்யால நடக்குற பைட் சீனைப் பார்த்தாலே தெரிஞ்சிப் போயிடும். இன்னும் மூணு மணி நேரம் உட்கார்ந்துருக்கணுமாடான்னு பீதி வந்துடும்.
இந்தப் படத்தை எல்லாம் பார்க்கும்போது தான் துப்பாக்கி எவ்வளவு நல்ல படம்னு தெரியும். ஒரு படத்துல வில்லன் ரோல் நின்னா தான் படம் எடுபடும். வில்லன் இந்தப் படத்துல என்ன தான் பண்றாருன்னு தெரியல. சும்மா சும்மா வந்து நின்னுக்கிட்டு இருக்காரு. அப்புறம் தான் தெரியுது. இன்னொரு வில்லன் வர்றாரு. அது இன்னும் மோசமா போகுது.
ரெண்டு விஜய்ல ஒருத்தருக்கு ஒருத்தர் சண்டை போடுறாங்க. ஒருத்தர் அடிக்கிறாரு. இன்னொருத்தர் அடி வாங்கிறாரு. இவரு அடிச்சிட்டாரேன்னு சந்தோஷப்படுறதா? இல்ல அவரு அடி வாங்கிட்டாரேன்னு கவலைப்படுறதா? ஆடியன்ஸே குழம்பிப் போய் உட்கார்ந்துருக்காங்க. இந்தப் படத்துல வில்லன் மோகனைத் தாண்டி சின்ன விஜயைத் தாண்டி ஒரிஜினல் வில்லன் யுவன் சங்கர் ராஜா தான்.
கிளைமாக்ஸ்ல பயங்கர பைட் நடக்குது. அதுக்கு பிஜிஎம் கிரிக்கெட் கமெண்ட்ரி ஓடிக்கிட்டு இருக்கு. அவரு எந்தளவுக்கு கேவலமா பேக்ரவுண்டு மியூசிக்கைப் போட்டுருந்தா கிளைமாக்ஸ்ல கிரிக்கெட் கமெண்ட்ரியைத் தூக்கிப் போட்டுருப்பாரு.
அது முழுக்க தோனியோட புகழைப் பார்த்துப் பேசிக்கிட்டு இருக்காங்க. எதாவது ஒண்ணைப் பண்ணி படத்தை ஒப்பேத்தி விட்டுரலாமான்னு தான் நினைக்கிறாங்க. கதை அதரப்பழசு. திரைக்கதை அதை விட மோசமானது. இதுல புதுசா ஒண்ணை சேர்க்கலைன்னா காரித்துப்புவாங்கன்னு டைரக்டர் யோசிச்சிருப்பாரு போல. அதனால இதுல டீஏஜிங் டெக்னாலஜியை சேர்;த்துருக்காரு.
டைரக்டர் ஸ்கிரிப்ட் சைடுல யோசிக்காம டெக்னாலஜி சைடுல சிந்திச்சி மூளை வீங்கி காது வழியா வெளியே வந்து அதை ஹார்டு டிஸ்க்ல பிடிச்சிட்டு அதுமேல கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்னு எழுதி இதுதான் படம்னு கையில கொடுத்துருக்காரு.
Also read: தளபதிக்குரிய ஃபுட் போடலைங்க! எல்லாத்துக்கும் அவர் ஒருத்தர்தான் காரணம்
இந்தப் படத்துல எதுக்கு ரெண்டு விஜய். டீஏஜிங் பண்ணனும்கற ஒரே காரணத்துக்காக வச்சிருக்காங்க. ஆள் மாறாட்டமும் படத்துல கிடையாது. படத்துக்கு வந்த வினையே அதுதான்.
குட்டையைக் குழப்பி விட்டுருச்சு. படத்தை ரெண்டே கால் மணி நேரத்துல எடுத்துருக்கலாம். மூணு மணி நேரம் எடுத்து உயிரை வாங்கிட்டாங்க. நீங்க போய் படம் பார்க்குறதா இருந்தா நீங்க தான் ஆடு. மேற்கண்ட விமர்சனத்தை ப்ளூ சட்ட மாறன் தெரிவித்துள்ளார்.