Categories: latest news

அப்படித்தான் சொல்வோம் சங்கி.. சங்கி.. சங்கி.. ரஜினிகாந்தை கடுமையாக விமர்சித்த புளூ சட்டை மாறன்!..

லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் அப்பா ரஜினிகாந்தை சமூக வலைதளங்களில் பலரும் சங்கி என அழைப்பது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு என்றும் அப்படி சொல்லக் கூடாது என்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சங்கி கிடையாது என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசியது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் படம் எப்படி இருக்கு, படத்தின் பாடல்களை எந்தளவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் வடித்து கொடுத்திருக்கிறார் என்பதை பற்றியெல்லாம் பேசாமல் நடிகர் ரஜினிகாந்த் விஜய்யை வைத்து ஸ்கோர் செய்ய அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சங்கி மேட்டரை கையில் எடுத்திருந்தார்.

இதையும் படிங்க: ரஜினி போதைக்கு விஜய் ஊறுகாயா?.. லால் சலாம் ஆடியோ லாஞ்சில் மீண்டும் அரங்கேறிய காக்கா – கழுகு மேட்டர்!

அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோயிலுக்கு முதல் ஆளாக சென்று முன் வரிசையில் உட்கார்ந்து கொண்டு 500 வருட போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என ரஜினிகாந்த் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. மேலும், ஜெயிலர் வெற்றியை தொடர்ந்து யோகி ஆதித்யநாத் வீட்டுக்குச் சென்று அவரது காலில் ரஜினிகாந்த் விழுந்து வணங்கியது ஏகப்பட்ட சங்கி விமர்சனங்களை கிளப்பின. இந்நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அப்படியெல்லாம் சொல்லாதீங்க இந்த படத்தில் என் அப்பா மொய்தீன் பாயாகவே நடித்திருக்கிறார். உண்மையான சங்கின்னா அப்படி நடிக்க மாட்டாங்க என்றார்.

இதை பார்த்த புளூ சட்டை மாறன் வசமா சிக்கி விட்டார் ரஜினிகாந்த் என நினைத்து, ”தலித், இஸ்லாமியர் வேடங்களில் நடிப்பது பணத்திற்காகவும், அச்சமூக மக்களை ஏமாற்றுவதற்கும். உதாரணம்: காலா, கபாலி, லால் சலாம். யோகி ஆதித்யநாத் காலில் விழுந்தது யார்? மணிப்பூர் விவகாரத்தில் மௌனம் காத்தது யார்? தமிழகம் நன்கறியும்.. தலீவர் அக்மார்க் சங்கியென்று. சங்கி. சங்கி. சங்கி.” என பதிவிட்டு பஞ்சாயத்தை கூட்டியிருக்கிறார்.

இதையும் படிங்க:  பாரதிராஜாவுக்கு பாடம் கற்பித்த இளையராஜா… அது சரி… ரெண்டுபேருக்கும் ஆசான் யாரு தெரியுமா?

பிஸ்மி வீட்டுக்குப் போய் ரவுண்டு கட்டியது போல ரஜினி ரசிகர்கள் ப்ளூ சட்டை மாறனை ரவுண்டு கட்டுவார்களா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

Saranya M

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

4 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

5 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

5 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

7 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

13 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

14 hours ago