ரஜினி போதைக்கு விஜய் ஊறுகாயா?.. லால் சலாம் ஆடியோ லாஞ்சில் மீண்டும் அரங்கேறிய காக்கா - கழுகு மேட்டர்!

ஜெயிலர் படத்தை வெற்றிப் படமாக்க நடிகர் ரஜினிகாந்த் கையாண்ட அதே திட்டத்தை தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லால் சலாம் படத்தையும் ஹிட் ஆக்க முயற்சி செய்திருக்கிறார் என விமர்சனங்கள் கிளம்பி உள்ளன.

ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவிலேயே காக்கா - கழுகு கதையை சொன்ன ரஜினிகாந்த் இதை யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை என்றும் தப்பு தப்பா எழுதி விடாதீங்க என ஹின்ட் கொடுக்க அனைவரும் விஜய்யை தான் ரஜினிகாந்த் சொல்கிறார் என பஞ்சாயத்தை கிளப்பினர். ரஜினிகாந்த் ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் சாக்கடை சண்டையை போட்டனர்.

இதையும் படிங்க: பாரதிராஜாவுக்கு பாடம் கற்பித்த இளையராஜா… அது சரி… ரெண்டுபேருக்கும் ஆசான் யாரு தெரியுமா?

அதன் பின்னர் லியோ படத்தின் வெற்றி விழாவில் ரத்னகுமார் எவ்ளோ பெரிய கழுகா இருந்தாலும் பசிச்சா கீழ இறங்கித்தான் ஆகணும் என பேசினார். பின்னர் பேசிய நடிகர் விஜய்யும் காக்கா - கழுகு பற்றிய பேச்சை பேசிவிட்டு ஒரு ரவுண்டு சுற்றி வந்து சிரித்தது ரஜினிகாந்துக்கான பதிலடி என்றே பலரும் விமர்சித்தனர்.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் மீண்டும் அந்த விஷயத்தை கையில் எடுத்து தெளிவாக சொல்றேன் என்கிற பெயரில் நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.

சர்ச்சை பெரிதாகும் போதே அதற்கான விளக்கத்தை ரஜினிகாந்த் சமூக வலைதளத்தில் கொடுத்திருக்கலாம். ஆனால், லால் சலாம் ஆடியோ லாஞ்ச் கன்டென்ட்டாக அதை பயன்படுத்தியது அவரது வியாபார புத்தி என்றே சொல்கின்றனர்.

இதையும் படிங்க: கமல் படம் தேறுமா தேறாதா? அஜித்தை வைச்சு டெஸ்ட் பண்ண இயக்குனர்.. கடைசியில் ரிசல்ட்?

நான் சொன்ன காக்கா - கழுகு கதையை அப்படியே வேற மாதிரி திரித்து விஜய்யை தான் சொன்னேன் என கிளப்பி விட்டு விட்டனர். விஜய் நான் பார்த்து வளர்ந்த பையன். தர்மத்தின் தலைவன் படத்தின் ஷூட்டிங்கில் விஜய் என்னை சந்தித்த போது அவருக்கு 13 வயசு தான். எஸ்.ஏ. சந்திரசேகர் வந்து விஜய்யை என்னிடம் அறிமுகப்படுத்தினார். முதல்ல நல்லா படிக்க சொல்லுங்க அப்புறம் நடிக்க வரலாம்னு சொன்னேன்.

அதன் பின்னர் விஜய் தனது விடாமுயற்சியால் இந்த அளவுக்கு உயரத்தில் வளர்ந்து நிற்கிறார். அடுத்து அரசியலுக்கும் வரப் போவதாக சொல்றாங்க, இந்நிலையில், என்னையும் அவரையும் கம்பேர் பண்ணி பேசுவது சரியல்ல. அது என் மனசை ரொம்ப வேதனையடைய செய்கிறது.

இதையும் படிங்க: அப்படியே தாத்தா ரஜினி ஸ்டைல்!.. அடுத்த ஹீரோ ரெடி!.. வைரலாகும் லால்சலாம் ஆடியோ விழா வீடியோ…

விஜயே சொல்லியிருக்காரு அவருக்கும் அவருக்கும் தான் போட்டின்னு, நான் கூட சொல்லியிருக்கேன். எனக்கும் என் படத்துக்கும் தான் போட்டின்னு தேவையில்லாமல் கம்பேர் பண்ணி பேசாதீங்க அது எனக்கு மரியாதை இல்லை. அவருக்கும் அது கெளரவம் இல்லை என ரஜினிகாந்த் லால் சலாம் இசை வெளியீட்டு விழாவிலும் விஜய் டாப்பிக்கை எடுத்து வைரலாக்கி விட்டார்.

 

Related Articles

Next Story