குஸ்கா மோடில் இருக்குறாரு…! இவருகெல்லாம் வாய் மட்டும் தான்… கோலிவுட் ஹீரோஸை கழுவி ஊற்றும் ப்ளூசட்டை மாறன்..!

BlueSattai Maran: கோலிவுட்டில் இருக்கும் நடிகர்களை வரிசையாக ட்விட்டரில் கடுமையாக விமர்சித்து வருகிறார் ப்ளூசட்டை மாறன். அதற்கான காரணம் குறித்து விசாரிப்பதை விட மாறனுக்கு சில சப்போர்ட் செய்தும் வருகிறார்கள் என்பதும் ஆச்சரியமான விஷயமாகி இருக்கிறது.
காவிரி தண்ணீர் பிரச்னை தற்போது விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது. தமிழகத்துக்கு எதிராக பிரச்னை நடந்தது. அதில் பிரபல நடிகர்கள் சிலர் கலந்து கொண்டு தங்களுடைய மாநிலங்களுக்கு ஆதரவினை தெரிவித்தனர். ஆனால் இந்த பிரச்னை குறித்து தமிழ் நடிகர்கள் யாரும் பேசக்கூட இல்லை.
இதையும் படிங்க: வாயாலேயே வட சுடுறத விட்டு செயல்ல காட்டுங்க! ‘லியோ’ படத்துக்கு தயாரிப்பாளர் விடுத்த சேலஞ்ச்
கர்நாடகாவில் அசிங்கப்படுத்தப்பட்டு வெளியேற்றப்பட்ட சித்தார்த்திடம் கன்னட நடிகரான சிவராஜ்குமார் மன்னிப்பு வேண்டினார். ஆனால் தமிழ் ஹீரோஸ் அவருக்கு ஆதரவாக கூட எந்த விஷயங்களையும் பேசவில்லை. இந்த விஷயங்களை கொண்ட ப்ளூசட்டை மாறன் தன்னுடைய எக்ஸ் கணக்கில் தொடர்ச்சியாக சில போஸ்ட்களை பகிர்ந்து வருகிறார்.
அதில், இதற்கு மட்டும் துணியாதவன் என சூர்யாவை, பேசும் படம் பேசாத கமல், அமைதியாக இருப்பவன் சிம்பு, டைம் டூ மியூட் விஜய், ரஜினி ஒரு தப்பு தாளங்கள், குஸ்கா மோடியில் கார்த்தி, அமைதியே வாகை சூடும் விஷால், அமைதியாக இருப்பதே ராஜதந்திரம் தனுஷ் என வரிசையாக அனைத்து நடிகர்களையும் கலாய்த்து வருகிறார்.
இதையும் படிங்க: கமலுக்கு கிடைத்த வாய்ப்பு சிவாஜிக்கு இல்லையே… அதனால் தான் இந்த படத்துக்கு இத்தனை லேட்டா?
இதில் கன்னட நடிகரான கிச்சா சுதீப், காவிரி எங்க உரிமை அதை யாருக்கும் விட்டு தரமாட்டோம் என்கிற ரீதியில் தன்னுடைய மாநிலத்துக்கு ஆதரவாக பேசி இருக்கிறார். இவரின் 47வது பான் இந்தியா படத்தினை இயக்கப்போகும் தமிழ் இயக்குனர் சேரன் அவர்களே..
காவிரி ஒரு மாநிலத்தின் தனிப்பட்ட சொத்தல்ல. தேசத்தின் சொத்து. அதில் தமிழகத்திற்கும் பங்குண்டு எனச்சொல்ல தைரியம் இல்லையா? தமிழர் நலனை விட உங்கள் பான் இந்தியா படம்தான் முக்கியமானதா? எனக் கேள்வி எழுப்பி இருக்கிறார். மாறனின் இந்த கேள்விகளுக்கு பல ரசிகர்கள் லைக்ஸ் தட்டி வருகின்றனர்.
காவிரி எங்கள் சொத்து. விட்டுத்தர மாட்டோம் - கிச்சா.
இவரை வைத்து பான் இந்தியா படம் இயக்கப்போகும் தமிழ் மண்ணின் மைந்தர் சேரன் அவர்களே..
'காவிரி ஒரு மாநிலத்தின் தனிப்பட்ட சொத்தல்ல. தேசத்தின் சொத்து. அதில் தமிழகத்திற்கும் பங்குண்டு' எனச்சொல்ல தைரியம் இல்லையா?
தமிழர் நலனை விட… pic.twitter.com/NIBgsEWiP6
— Blue Sattai Maran (@tamiltalkies) October 3, 2023