Connect with us

Cinema News

ஃபர்ஸ்ட் ஹாஃப் நல்லா போச்சு!.. செகண்ட் ஹாஃப் தான் செதச்சிட்டாங்க!.. ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்!..

விஜய் தேவரகொண்டா, மிருணாள் தாகூர் நடிப்பில் வெளியான ஃபேமிலி ஸ்டார் படத்தின் முதல் பாதி நல்லாவே இருந்தது என்றும் இரண்டாம் பாதியில் கதையை எப்படி கொண்டு செல்வது என்றே தெரியாமல் இயக்குநர் பரசுராம் சொதப்பி விட்டார் என ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சன வீடியோவில் கூறியுள்ளார்.

அர்ஜுன் ரெட்டி படத்திற்கு பிறகு விஜய் தேவர்கொண்டாவுக்கு மிகப்பெரிய வெற்றி படத்தைக் கொடுத்தவர் இயக்குனர் பரசுராம் தான். ராஷ்மிகா மந்தனா உடன் இணைந்து கீதா கோவிந்தம் படத்தில் நடித்திருந்தார் அந்தப் படத்தை இயக்கியது பரசுராம் தான்.

இதையும் படிங்க: வரிசையா செஞ்சுரி அடிக்கும் மல்லுவுட்!.. ஆட்டநாயகனாக மாறிய ஆடுஜீவிதம்!.. இத்தனை கோடி வசூலா?

அதே போல இன்னொரு வெற்றி தனக்கு கிடைக்கும் என எதிர்பார்த்து மீண்டும் அந்த இயக்குனரை தேர்வு செய்திருந்தார் விஜய் தேவரகொண்டா. குடும்ப ரசிகர்களை கவரும் விதமாக ஃபேமிலி ஸ்டார் படத்தின் டைட்டிலை வைத்து உருவாக்கியவர் இந்த படம் நேற்று வெளியானது. அந்தப் படத்திற்கு சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கலவையான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

கீதா கோவிந்தம் படத்திற்கு பிறகு விஜய் தேவரகொண்டா நடித்த அரை டஜன் படங்கள் தோல்வியை தழுவி வருகின்றன. கடந்த ஆண்டு சமந்தாவுடன் இணைந்து விஜய் தேவரகொண்டா நடித்த குஷி திரைப்படம் அவருக்கு நல்ல வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும் போதுமான வெற்றியை கொடுத்தது.

இதையும் படிங்க: வெளிநாட்டில் பாஸ்போர்ட்டை மிஸ் பண்ண குமரிமுத்து! மறுநாள் சூட்டிங்.. எப்படி வந்தார் தெரியுமா

அந்த படத்தை திறந்து ஃபேமிலி ஸ்டார் திரைப்படம் பிளாக்பஸ்டர் படமாக அமைப்பு என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த படமும் சொதப்பி விட்டது. படத்தின் முதல் பாதி முழுவதும் டைட்டிலுக்கு ஏற்றபடி நன்றாகவே நகர்ந்தது என்றும் விஜய் தேவரகொண்டாவை பலரும் விரும்பினாலும் அவரது குடும்பத்தை பார்த்துவிட்டு திருமணம் செய்து கொள்ள யாரும் நினைக்கவில்லை. அவருடைய வீட்டுக்கு வாடகைக்கு குடியேறும் மிருணாள் தாக்கூர் குடும்பத்தினருடன் அன்பாக பழகி ஹீரோவையும் காதலிக்கிறார்.

இருவரும் காதலித்துக் கொண்டிருக்கும் நிலையில், திடீரென ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் இடையே ஒரு பிரச்சனை வெடிக்கிறது பின்னர் இருவரும் எப்படி சேர்ந்தார்கள் என்பது தான் இந்த படத்தின் கதை. ஆனால் இந்த கதையை எப்படி கொண்டு செல்வது என தெரியாமல் இரண்டாம் பாதியில் அமெரிக்காவுக்கு கூட்டிச் சென்று இயக்குனர் மொக்கை போட்டுவிட்டார் என கழுவி ஊற்றியுள்ளார்.

இதையும் படிங்க: அண்ணாவை விட்டு அல்லு பக்கம் போன அட்லீ… கமலை வச்சி தளபதியை தூக்கிய எச்.வினோத்!..

google news
Continue Reading

More in Cinema News

To Top