Connect with us

Cinema News

அடிக்க வறேன்னு சொன்னீங்க ஆளையே காணோம்!.. ரஜினி ரசிகர்களிடம் வம்பிழுக்கும் புளூசட்டமாறன்..

ட்விட்டர் ஸ்பேஸில் நெகட்டிவ் விமர்சனம் கொடுப்பது யாராக இருந்தாலும் போட்டு அடிச்சிடுங்க என சில விஜய் ரசிகர்கள் பேசிய ட்விட்டர் ஸ்பேஸ் ஆடியோவை ஷேர் செய்து விஜய் ரசிகர்கள் தனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறாங்க என புளூசட்டமாறன் போலீஸில் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில், மாயாஜாலில் படம் ஆரம்பித்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். இன்னமும் ஒரு ரஜினி ரசிகன் கூட வந்து தன்னை அடிக்கவில்லையே என படம் முடியும் வரை ரஜினி ரசிகர்களை தேடிக் கொண்டிருந்ததாக ட்ரோல் ட்வீட் ஒன்றை போட்டு மீண்டும் சூப்பர்ஸ்டார் ரசிகர்களை வம்பிழுத்துள்ளார்.

விஜய் ரசிகர்களுக்கு அடி: 

ஜெயிலர் படத்துக்கு நெகட்டிவ் விமர்சனத்தை கொடுத்தது மட்டுமில்லாமல், ரஜினி ஒழிக என வெற்றி தியேட்டரில் கோஷம் போட்ட விஜய் ரசிகர்களை சில ரஜினி ரசிகர்கள் துரத்தி துரத்தி அடித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன.

இதே போல புளூசட்டமாறனையும் ரஜினி ரசிகர்கள் அடித்து விடுவார்களோ என்கிற அச்சம் எழுந்த நிலையில், ஏற்கனவே போலீஸில் அவர் புகார் ஒன்றையும் கொடுத்திருந்தார்.

ரஜினி ரசிகர்களை சீண்டிய புளூசட்டமாறன்: 

கடந்த சில வாரங்களாகவே ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு முன்பிருந்தே ரஜினிகாந்தையும் ஜெயிலர் படத்தையும் கடுமையாக ட்ரோல் செய்து வந்த ப்ளூ சட்டை மாறன் மாயாஜாலுக்கு படம் பார்க்க வருகிறேன் என்று ட்வீட் போட்டு ரஜினி ரசிகர்களை சீண்டி இருந்தார்.

கடைசி நேரத்தில் வந்த பயம் காரணமாக ரஜினி ரசிகர்கள் தன்னை அடித்து விடப் போகின்றனர் என நினைத்து போலீஸில் முன்னெச்சரிக்கையாக புகார் அளித்த ப்ளூ சட்டை மாறன் அதையும் ட்விட்டரில் பதிவிட்டு ரஜினி ரசிகர்களை அலர்ட் செய்து விட்டார்.

என்னை யாருமே அடிக்க வரல:

இந்நிலையில், மாயாஜாலில் ஈவ்னிங் ஷோ ஜெயிலர் படத்தை பார்த்து முடித்து விட்டு வீட்டுக்கு எந்தவொரு அடியும் வாங்காமல் பத்திரமாக தப்பித்துச் சென்ற புளூசட்டமாறன் தற்போது மீண்டும் ட்விட்டர் பக்கத்தில் ஜெயிலர் படத்தையும் ரஜினியையும் கலாய்த்து பதிவுகளை போட்டு வரும் நிலையில், ”மாயாஜால்ல படம் ஆரம்பிச்சிருச்சி. எங்க ஆளையே காணும்?” என ட்வீட் போட்டு ரஜினி ரசிகர்களை வம்பிழுத்துள்ளார்.

அதான் ட்விட்டர் ஸ்பேஸில் சும்மா பேசியதற்கே பயந்து போலீஸுக்கு போனவன் தான நீ என ரஜினி ரசிகர்கள் புளூசட்டமாறன் ட்வீட்டுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

google news
Continue Reading

More in Cinema News

To Top