Kanguva: ‘கங்குவா’ ரிலீஸுக்கு முன் மொத்த டீமும் கும்மியடிச்ச தருணம்.. லிஸ்ட் போட்டு கலாய்ச்சிட்டாரே

bluesattaimaRan
Kanguva: சூர்யாவின் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த கங்குவா திரைப்படம் இன்று உலகெங்கிலும் ரிலீஸ் ஆகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது. சிறுத்தை சிவா இயக்கத்தில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் மிக பிரம்மாண்டமாக பல கோடி பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் கங்குவா. இந்த படத்தில் திரிஷா பதானி, பாபி தியோல், கருணாஸ் போன்ற எண்ணற்ற நடிகர்கள் நடித்திருக்கின்றனர் .
சூர்யாவின் கடின உழைப்பு: ஆனால் இவர்கள்தான் அந்த நடிகர்கள் என அடையாளம் காண முடியாத அளவில் இவர்களுடைய கெட்டப் இந்த படத்தில் அமைந்திருக்கின்றன. இதுவரை படத்தைப் பற்றி கலவையான விமர்சனங்களே எழுந்து வருகின்றன. ஆனால் சூர்யாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்படுகின்றது. இந்த படத்திற்காக அவர் போட்ட அந்த கடின உழைப்பு நன்றாகவே தெரிகிறது.
இதையும் படிங்க: நான் ‘கேட்டது’ வேற ஆனா அவர் செஞ்சது வேற… கலங்கும் துணை நடிகர்!…
கிட்டத்தட்ட இரண்டு வருடமாக இந்த படத்திற்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டார் சூர்யா என்று தான் சொல்ல வேண்டும் .இந்த நிலையில் படம் 2 ஆயிரம் கோடி வசூலை அள்ளும் என ரிலீஸ் ஆவதற்கு முன்பே பல பேட்டிகளில் ஞானவேல் ராஜா கூறியிருந்தது கடும் விமர்சனத்திற்கும் ஆளானது. இவரை பற்றி ரசிகர்களிடம் ஒருவித கிண்டலான பார்வையும் இருக்கிறது.
ப்ளூசட்டை மாறன் பார்வை: ஏனெனில் எப்போதுமே ஞானவேல் ராஜா ஓவர் பில்டப் பண்ணுவார் என்ற ஒரு கருத்து இருந்து வருகிறது. இதற்கிடையில் ப்ளூ சட்டை மாறன் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு கங்குவா படத்தை பற்றி பெரிய அளவில் ஹைப்பை ஏற்றிய அந்த பெருமைமிகு பிரபலங்கள் யார் யார் என்பதை பட்டியலிட்டு போட்டு காண்பித்து இருக்கிறார்.
2 ஆயிரம் கோடி .தமிழில் முதல் பேன் இந்தியா ஹிட் இதுதான். இதை சொன்னவர் ஞானவேல். கட்டுப்படுத்த முடியாத காட்டாறு - சிறுத்தை சிவா, இந்தியாஏ வாயை பிளந்து பார்க்கும் - சூர்யா, திரை தீப்பிடிக்கும் - வெற்றி டிஓபி, 100 தடவை பாத்துட்டேன் - மதன் கார்க்கி, சூர்யா அரசியலுக்கு வரணும் - போஸ் வெங்கட், உலகிலேயே சிறந்த நடிகர் சூர்யா தான் - கருணாஸ்.

bluesattaimaran
இதையும் படிங்க: நான் ‘கேட்டது’ வேற ஆனா அவர் செஞ்சது வேற… கலங்கும் துணை நடிகர்!…
38 மொழிகள் 11 ஆயிரத்து 500 ஸ்கிரீன்கள் - ஞானவேல் ராஜா, 2 மணி நேரம் 10 நிமிடங்கள் ஒரே கூஸ்பம்பாகத்தான் இருக்கும் - ஞானவேல், மரத்தில் ஏற சொன்னா உடனே சூர்யா சார் சரசரனு ஏறிடுவார் - சிறுத்தை சிவா, இந்திய சினிமாவில் பார்க்காத பயங்கரமான சண்டை சீன் இதுல இருக்கு - சிறுத்தை சிவா, எக்ஸ் லைக் பட்டனை கங்குவா ஐகான் போல மாற்றினார் எலன் மஸ்க் - சூர்யா ஃபேன்ஸ் ,பாகுபலி எடுக்க எனக்கு இன்ஸ்பிரேஷனே சூர்யா தான் - ராஜமவுலி. இப்படி படத்தை பற்றி ஓவர் பில்டப் செய்த அந்த மொத்த கூட்டாளிகளும் இவர்கள்தான் என லிஸ்ட் போட்டு காட்டி இருக்கிறார் ப்ளூ சட்டை மாறன். ஆனால் இவர்கள் சொன்னதைப் போல் சூர்யாவின் நடிப்பை தவிர படம் எதிர்பார்த்த அளவு இல்லை என்பது தான் பல பேரின் விமர்சனமாக இருக்கிறது.