Cinema News
அப்ப இனிச்சுச்சு இப்ப கசக்குதா?!… குப்பை காவியம் ஹிட் ஆகிடுமா!… பொளந்து கட்டிய ப்ளூ சட்டை!…
திரைப்பட விநியோகிஸ்தர் திருப்பூர் சுப்ரமணியன் கருத்துக்கு ப்ளூ சட்டை மாறன் பதில் கொடுத்திருக்கின்றார்.
கங்குவா படத்தின் நெகட்டிவ் விமர்சனங்களுக்கு எதிராக திரையரங்கு உரிமையாளரும், திரைப்பட விநியோகிஸ்தருமான திருப்பூர் சுப்ரமணியன் இன்று பேசியிருந்தார். கடந்த இரண்டு வருடங்களாக தமிழகத்தில் காலை 9 மணிக்கு தான் காட்சிகள் தொடங்கப்படுகின்றது. அதே சமயம் அண்டைய மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற இடங்களில் அதிகாலை 4 மணிக்கு காட்சிகள் தொடங்கப்படுகின்றது.
இதன் மூலமாக நாமே அவர்களுக்கு கண்டென்ட் கொடுத்து வருகிறோம். முதலில் அதை தடுத்து நிறுத்துங்கள். தமிழ் சினிமாவில் இருந்து வெளியாகும் படங்கள் இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் தான் ரிலீஸ் ஆக வேண்டும். அப்படி ஒரு ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்கு பிறகு ரசிகர்கள் படம் பார்த்துவிட்டு கருத்து கூறட்டும். தற்போது ஏராளமான youtube சேனல் வந்துவிட்டது.
இதையும் படிங்க: ஒவ்வொருத்தரா லைன்ல வாங்கப்பா!… போட்டி போடும் இயக்குனர்கள்?!… குழப்பத்தில் சூப்பர் ஸ்டார்!…
அதில் நெகட்டிவ் ரிவ்யூ போட்டால்தான் மக்கள் படிக்கிறார்கள் என்பதால் படம் குறித்து தேவையில்லாத விமர்சனங்களை காட்டுகிறார்கள். கங்குவா படம் பற்றி முதல் விமர்சனமாக வேறு மாநிலத்திலிருந்து ஒரு ரசிகர் எக்ஸ் தளத்தில் பதிவிடுகின்றார். அவரின் பார்வையில் அந்த படம் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் அது எத்தனையோ பேருக்கு பிடித்திருக்கின்றது. ரசிகர்கள் அதிக அளவு எதிர்மறையான விமர்சனங்களை கூறும் போது மற்றவர்களும் அதனை நம்பி விடுகிறார்கள்.
படம் நன்றாக இல்லை என்ற கண்ணோட்டத்திற்கு வந்து விடுகிறார்கள். இதனால் திரையரங்குகளில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படங்கள் மூன்று நான்கு நாட்களிலேயே காத்து வாங்க தொடங்கி விடுகின்றது என்று தன்னுடைய ஆதங்கத்தை கொட்டி இருந்தார் திருப்பூர் சுப்ரமணியன். இதைப் பார்த்த பலரும் அவரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். அதில் ‘தியேட்டரில் இருந்து கொண்டே படம் நன்றாக இல்லை என்று பப்ளிக் ரிவியூ தருவது நியாயமா? இதே போல ஒரு ஹோட்டல் அல்லது துணிக்கடை வாசலில் நின்று கொண்டு இந்த கடையில் தரம் இல்லை உள்ளே போகாதீர்கள் என உங்களால் கத்த முடியுமா? என்று சென்னை உட்லண்ட்ஸ் தியேட்டர் ஓனர் வெங்கடேசன் கூறியதாக திருப்பூர் சுப்ரமணியம் கூறியிருக்கின்றார்.
சரி அப்படி என்றால் ஹோட்டல், துணி கடை உள்ளிடவற்றின் வாசலில் கடை ஊழியர் அல்லது செக்யூரிட்டி சாலையில் செல்லும் மக்களிடம் உள்ளே வருமாறு அழைப்பார். அவர்களுக்கு சம்பளம் உண்டு. ஆனால் திரையரங்கில் பப்ளிக் ரிவ்யூ தந்து பல படங்களை பாராட்டி அந்த வீடியோ மூலம் பலரையும் படம் பார்க்க வைத்து உங்களை கோடீஸ்வரனாக்கும் மக்களுக்கு இதுவரை ஒரு ரூபாயாவது தந்திருக்கிறீர்களா?
அப்போது மட்டும் இனித்த பப்ளிக் ரிவியூ இப்போது கசக்கின்றதா? விமர்சனங்களை தடை செய்தால் அதற்குப் பிறகு வெளியாகும் குப்பை காவியங்கள் எல்லாம் மெகா ஹிட்டாகி விடுமா? வாய்ப்பே இல்லை. படம் முடிந்த பிறகு செல்போன் மூலம் தனக்கு தெரிந்தவர்களிடம் இந்த படத்துக்கு போய் பணம், நேரம் இரண்டையும் வீணாக்காதீர்கள் என்று சொல்வதை உங்களால் தடுக்க முடியாது.
இதையும் படிங்க: ஆல் ஏரியாவையும் அதிரவிட்ட புஷ்பா 2… தமிழ்நாட்டுல 100 கோடியாமே?!… மாஸ்டர் பிளான் போங்க…
சில ஆண்டுகளுக்கு முன்பு சோசியல் மீடியா, செல்போன் இல்லாத போதும் கூட மவுத் டாக் மூலம் பல படங்கள் தோற்றது என்பது வரலாறு. ஆனால் இப்போது மட்டும் இவர்களுக்கு மக்கள் மீது கோபம் வர காரணம் என்ன? முதல் மூன்று அல்லது நான்கு நாட்களில் எல்லா திரையரங்குகளிலும் ஒரு படத்தை வெளியிட்டு சுடச்சுட வசூலை அள்ளிவிட வேண்டும்.
படம் மொக்கையாக இருந்தாலும், பெரிய நடிகர்கள் நடித்த படம் 3 நாட்களில் பெரிய வசூலை ஈட்டிவிடும். அதற்கு தடையாக பப்ளிக் ரிவ்யூ மற்றும் சோசியல் மீடியா ரிவ்யூக்கள் இருப்பது தான் இந்த கோவத்திற்கு காரணம்’ என்று அவர் பதிவிட்டிருக்கின்றார்.