ஒரு சீன் கூட நல்லா இல்லை!.. ஹிப் ஹாப் ஆதியின் PT சார் படத்தை முடித்து விட்ட ப்ளூ சட்டை மாறன்!..

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ரியோ ராஜாவை வைத்து நெஞ்சமுண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா படத்தை இயக்கிய கார்த்திக் வேணுகோபாலன் அடுத்ததாக ஐசரி கணேஷ் தயாரிப்பில் ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ள PT சார் படத்தை இயக்கியுள்ளார். இந்த வாரம் வெளியான ராமராஜன் நடித்த சாமானியன் திரைப்படம் திரையரங்குகளில் கொஞ்சம் கூட ஓடாத நிலையில், அந்தப் படத்திற்கு கூட விமர்சனம் சொல்லாமல் தவிர்த்து விட்ட ப்ளூ சட்டை மாறன் PT சார் படத்தை பொளந்து கட்டியுள்ளார்.

PT சார் படத்தில் ஒரு கதைக்கு பதிலாக இரண்டு கதையை எடுத்துக் கொண்டு படத்தை கெடுத்து விட்டதாக ப்ளூ சட்டை மாறன் குற்றம் சாட்டியுள்ளார். படத்தின் ஆரம்பத்தில் சிறுவயதிலேயே ஹீரோ ஹிப்ஹாப் ஆதிக்கு ஜாதகம் பார்க்கும்போது அவனது வாழ்க்கையில் கண்டம் இருப்பதாகவும் அதனால் ஆதியை எந்த ஒரு வம்பு தும்புக்கும் போக விடாமல் அவரது பெற்றோர்கள் வளர்க்கின்றனர்.

இதையும் படிங்க: ஹிப் ஹாப் ஆதி படம் ஹிட்டா?.. ஃபிளாப்பா?..PT சார் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?..

ஆதியின் பக்கத்து வீட்டில் இருக்கும் அனிகா சுரேந்திரன் பாலியல் ரீதியாக தொல்லையை அனுபவித்த நிலையில், அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ஹிப் ஹாப் ஆதி பொங்கி எழுவது தான் இந்த படத்தின் கதையாக உள்ளது.

பாலியல் தொல்லையை சந்தித்த பெண்களை தவறாக பார்க்கக்கூடாது என்கிற கதையை உருப்படியாக எடுத்திருந்தால் படம் எப்படி இருக்கும் அதை விடுத்து தேவையில்லாமல் ஹீரோயிசத்தை ஆதிக்காக இயக்குனர் வைத்தது தான் படம் சொதப்ப காரணம் என்ன ப்ளூ சட்டை மாறன் விமர்சித்துள்ளார்.

இதையும் படிங்க: அதிகாலை சாப்பிட வந்த ரஜினி… தலைதெறிக்க ஓட விட்ட ஓட்டல் உரிமையாளர்…

எந்தவொரு பாடலும் நல்லா இல்லை என்றும் அப்படியே படிப்பது போல உள்ளதாகவும் படத்தில் நல்லா இருக்கு என ஒரு காட்சியை கூட சொல்ல முடியவில்லை. பிடி பீரியடையே ரத்து செய்யும் உத்தரவுக்கு பிடி சார் பொங்காமல் ஹீரோயினை பார்த்து ஜொள்ளு விட்டு செல்வது எல்லாம் ரொம்பவே மொக்கை என கலாய்த்துள்ளார்.

 

Related Articles

Next Story