நடிகை திரிஷா குறித்து படுமோசமாக பேசியதாக மன்சூர் அலிகான் மீது திரையுலகம் திரண்டு வந்த நிலையில், அதே வார்த்தையை பேசிய மிஷ்கினை மட்டும் ஏன் யாரும் கண்டுக்காமல் சிரித்தார்கள் என வீடியோ வெளியிட்டு கேள்வி எழுப்பி உள்ளார் ப்ளூ சட்டை மாறன்.
”ஜி.வி.பிரகாஷ், கௌதம் வாசுதேவன் நடித்த செல்ஃபி படத்தின் ப்ரெஸ் மீட்டில் மிஷ்கின் பேசியதுதான் இந்த வீடியோ.
இந்த அநாகரீக பேச்சிற்கு ஜி.வி.பிரகாஷ் சிரித்து மகிழ்கிறார். வெற்றிமாறனாவது கண்டிப்பார் என பார்த்தால்.. அவரும் சிரித்தபடி அமர்ந்திருந்தது கொடுமை.
இதையும் படிங்க: தளபதி 68 பட டைட்டில் ரெடி!.. டிக் செய்த விஜய்!. எப்போ சொல்றாங்க தெரியுமா?..
விலங்குகளில் கேவலமானது எருமைமாடு, நிறங்களில் மட்டமானது கருப்பு எனும் இழிவான எண்ணத்துடன் எருமை பற்றி இப்படி பேசியிருப்பது உலக சினிமா மாமேதை, புத்தகப்புலியான மிஷ்கினுடைய பிற்போக்குத்தனத்தின் உச்சம்.
ரேப் எனும் வார்த்தையை நாகரீக உலகில் யாரும் பயன்படுத்துவதில்லை. Sexual Assault உள்ளிட்ட வேறு வார்த்தை பிரயோகங்கள் பொதுத்தளத்தில் எபாபோதே வந்துவிட்டது பற்றிக்கூட தெரியாமல் இருக்கிறார்.
ஏழெட்டு எருமைகளை ரேப் செய்யும் காட்சியை வைப்பேன் என்று சொல்வதை விட மகா மட்டமான சொற்கள் உண்டா?
இதையும் படிங்க: மன்சூர் அலிகான் தப்பா ஒண்ணுமே பேசல!.. கிஸ் சீன் பத்தி ஹீரோயின் கேட்க மாட்டாங்க.. ரேகா நாயர் விளாசல்!
இதையெல்லாம் தட்டிக்கேட்காத திரையுலக மேதாவிகள், மகளிர் அமைப்பு மாந்தர்கள்.. மன்சூரை மட்டும் குதறிக்கொண்டு இருப்பது ஏன்?
இப்போதும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை. இப்படி மிஷ்கின் பேசியது பற்றி இன்றாவது வெற்றிமாறனும், மன்சூருக்கு எதிராக கொந்தளித்த திரையுலகத்தினர் மற்றும் சமூக ஆர்வக்கோளாறுகளும் கண்டனம் தெரிவிப்பார்களா அல்லது பம்மிக்கொண்டு இருப்பார்களா?
எளிய மக்களுக்காக அவ்வப்போது குரல் தரும் ஜி.வி.பிரகாஷ்.. உங்களுக்கு இந்தப்பேச்சு எப்படி சிரிப்பை வரவழைத்தது?
பல மேடைகளில் கெட்டவார்த்தைகள் பேசும் மிஷ்கினை விட்டுவிட்டு.. ஒருவாரமாக மன்சூருக்கு மட்டும் அதீத முக்கியத்துவம் தருவது ஏன்?
பிரபல இயக்குனருக்கும், வில்லன் நடிகருக்கும் தனித்தனி அளவுகோல் வைத்துள்ளீர்களா?
அல்லது மன்சூரின் மதம்தான் உங்களுக்கு பெரிய பிரச்னையாக படுகிறதா?” என இந்த விவகாரத்தில் மன்சூர் அலிகான் மதத்தையும் உள்ளே கொண்டு வந்து விட்டார் ப்ளூ சட்டை மாறன்.
சிவகார்த்திகேயனைப் பொருத்த…
கங்குவா படத்தின்…
தனுஷ், நயன்தாரா…
இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்…
தமிழ் சினிமாவில்…