மன்சூர் அலிகான் தப்பா ஒண்ணுமே பேசல!.. கிஸ் சீன் பத்தி ஹீரோயின் கேட்க மாட்டாங்க.. ரேகா நாயர் விளாசல்!

மன்சூர் அலிகான் நடிகை திரிஷா குறித்து தவறாக பேசிவிட்டார் என்றும் ஆபாசமாக பேசிவிட்டார் என்றும் திடீரென குதிக்கும் திரையுலகம் அவருக்கு முன்னதாக பல நடிகர்கள் பல நடிகைகள் பற்றி பேசியது பற்றியெல்லாம் பேசாமல் இருப்பது ஏன் என்கிற கேள்வியை நடிகை ரேகா நாயர் முன் வைத்துள்ளார்.

ஒரு படத்தில் ஹீரோவிடம் முத்தக் காட்சி இருக்கிறதா என நடிகைகள் கேட்பதில்லையா? அப்படியிருந்தால் நடிக்க மாட்டேன் என மறுக்கவும் அவர்களுக்கு உரிமை இருக்கிறது. அரைகுறை ஆடை அணிந்துக் கொண்டு ஆட மாட்டேன் என்றும் சொல்லலாம்.

இதையும் படிங்க: தப்பா இருந்தா ஐ யம் சாரி!.. திரிஷா விவகாரத்தில் இறங்கிவந்த மன்சூர் அலிகான்…

மன்சூர் அலி கான் எந்தவொரு தப்பான நோக்கத்துடன் திரிஷா பற்றி பேசவில்லை என்றும் சினிமாவில் அவருடன் ரேப் சீன் இல்லை என்றே அவர் பேசினார் என்றும் அது பெரிய தவறாக மாற்றப்பட்டுள்ளது அவருடைய பேச்சு தொனி தான் காரணம் என்றும் நடிகை திரிஷா மன்சூர் அலிகான் பேசியது தனக்கு பிடிக்கவில்லை என்றும் இனிமேல் அவருடன் நடிக்க மாட்டேன் என்றும் கூறியது அவருடைய தெளிவான முடிவு.

அதில், மாற்றுக் கருத்து சொல்ல எதுவும் இல்லை. நடிகை குஷ்பு இப்படி வெகுண்டு எழுந்திருக்கிறார். அதே போல திரிஷாவும் பேச அவருக்கு முழு உரிமை உண்டு. ஆனால், அதற்காக மன்சூர் அலிகானை மற்ற திரையுலக பிரபலங்கள் அவர் மட்டுமே தவறு செய்தவர் போல திருப்பிக் கொண்டு பேசுவது சரியில்லை என்றும் உண்மையாக திரிஷாவை பலாத்காரம் செய்ய வேண்டும் என மன்சூர் அலிகான் பேசியிருந்தால், அவருக்கு தூக்குத் தண்டனையே வாங்கிக் கொடுக்க பேசுவேன். ஆனால், அவர் பேசியது சினிமாத்தனமானது என விளக்கி உள்ளார் ரேகா நாயர்.

இதையும் படிங்க: ஸ்மால் சைஸ் ஜாக்கெட்டில் அழகு அள்ளுது!.. மறைக்காம மனச காட்டும் பூஜா ஹெக்டே!..

Related Articles
Next Story

COPYRIGHT 2024

Powered By Blinkcms
Share it