Connect with us

Cinema News

இந்த ஆண்டு வெளியான இத்தனை படங்கள் ஃபிளாப்பா?.. ப்ளூ சட்டை மாறன் லிஸ்ட்ல அந்த படம் தான் ஹிட்டா?

பொங்கல் விடுமுறை, குடியரசு தின விடுமுறை மற்றும் காதலர் தினம் என அனைத்தையும் டார்கெட் செய்து வெளியான படங்களும் இந்த வருடம் ஒவ்வொரு வாரமும் வெளியான அத்தனை படங்களும் படுதோல்வியை சந்தித்து இருப்பதாக ப்ளூ சட்டை மாறன் பதிவிட்டிருக்கிறார்.

கோலிவுட்டில் நல்ல கதைகளையும் இயக்குநர்களையும் நம்பாமல் ஹீரோக்களின் கால்ஷீட்டை மட்டும் நம்பி சொதப்பல் படங்களை இயக்கும் இயக்குநர்களுக்கே பட வாய்ப்புகள் கொடுக்கப்படுவதால் தான் படங்கள் சொதப்பி வருகின்றன என்கின்றனர்.

இதையும் படிங்க: அஜித்லாம் பேசவே மாட்டாரு! விஜய் வெட்கப்படுவாரு.. 90களில் குத்தாட்டம் போட்ட நடிகை சொன்ன சீக்ரெட்

இந்த ஆண்டு பொங்கலுக்கு தனுஷின் கேப்டன் மில்லர் மற்றும் அடுத்த தளபதி என சீன் போடும் சிவகார்த்திகேயனின் அயலான் படங்கள் வெளியாகின. ஆனால், அந்த இரு படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வியை சந்தித்தன.

இந்நிலையில், இந்த ஆண்டு தோல்வியை தழுவிய படங்களின் பட்டியலை ப்ளூ சட்டை மாறன் வெளியிட்டுள்ளார்.

அவரது லிஸ்ட் படி அயலான், கேப்டன் மில்லர், மெரி கிறிஸ்துமஸ், சிங்கப்பூர் சலூன், ப்ளூ ஸ்டார், டெவில், மறக்குமா நெஞ்சம், வடக்குப்பட்டி ராமசாமி, லால் சலாம் மற்றும் லவ்வர்.

இதையும் படிங்க: என்னங்க பண்றீங்க ஷிவானி!.. அதுக்குள்ளலாம் வெயிட் லிஃப்ட்டை விட்டு எடுக்குறீங்க!.. வேறமாறி வீடியோ!..

மேலும், கடந்த வாரம் வெளியான சைரன் படத்திற்கும் பெரிதாக வசூல் இல்லை என்றும் அதுவும் கூடிய சீக்கிரம் ஃபிளாப் லிஸ்ட்டில் வந்து விடும் என பதிவிட்டு இருக்கிறார்.

இவர் வெளியிட்ட லிஸ்ட்டில் அருண் விஜய்யின் மிஷன் சேப்டர் ஒன் படம் மட்டுமே இல்லை. ஆனால், அந்த படமும் ஹிட் என சொல்வாரா என பார்த்தால், ஹிட் லிஸ்ட்டில் ஜீரோ என ஒரு படம் கூட இந்த ஆண்டு வெற்றிப் பெறவில்லை எனக்கூறியிருக்கிறார்.

 

google news
Continue Reading

More in Cinema News

To Top