மலையாள படங்களை புறக்கணிக்கும் மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள்!.. ப்ளூ சட்டை மாறன் குற்றச்சாட்டு!..

by Saranya M |   ( Updated:2024-04-13 11:11:49  )
மலையாள படங்களை புறக்கணிக்கும் மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள்!.. ப்ளூ சட்டை மாறன் குற்றச்சாட்டு!..
X

தமிழ்நாட்டில் புதிதாக வெளியாகும் புது படங்களை ரசிகர்கள் கொஞ்சம் கூட கண்டு கொள்ளாமல் மலையாளத்தில் வெளியாகும் நல்ல திரைப்படங்களை ரசித்து பார்க்க தியேட்டர்களுக்கு செல்வது பிரச்சனை ஏற்படுத்தியுள்ளதாக ப்ளூ சட்டை மாறன் புதிய பஞ்சாயத்தை கிளப்பியுள்ளார்.

இந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான படங்கள் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை அனைத்துமே சிறப்பாக ஓடி வருகிறது. மோகன் வாலின் மலைக்கோட்டை வாலிபன் படத்தை தவிர மற்ற படங்கள் வெற்றி படங்களாக மாறி உள்ளன.

இதையும் படிங்க: புது படமே கிடைக்கலைன்னா என்ன?.. பல கோடிக்கு மும்பையில் பங்களா வாங்கிய புட்ட பொம்மா!..

பிப்ரவரி மாதம் வெளியான பிரேமலு, மம்மூட்டி நடிப்பில் வெளியான பிரமயுகம் மற்றும் குணா குகையை மையப்படுத்தி வெளியான மஞ்சுமெல் பாய்ஸ், பிருத்திவிராஜ் நடிப்பின் வெளியான ஆடுஜீவிதம் என ஒவ்வொரு படங்களும் மிகப்பெரிய வெற்றி படங்களாக மலையாள சினிமாவுக்கு மாறியுள்ளன.

தமிழ்நாட்டிலும் ரசிகர்கள் அந்த படங்களை பார்க்கத்தான் ஆர்வமாக தியேட்டருக்கு செல்கின்றனர். இந்த வாரம் வெளியான டியர் மற்றும் ரோமியோ படங்கள் ரசிகர்களை சோதித்து வரும் நிலையில், பகத் பாசில் நடிப்பில் வெளியான ஆவேசம் திரைப்படம் மலையாளத்தில் அதிரி புதிரி ஹிட் அடித்து வருகிறது.

இதையும் படிங்க: அனிமல் படத்தை மேடையிலேயே அசிங்கப்படுத்திய சித்தார்த்!.. பாய்ஸ் படத்துல ஓடுனதுலாம் மறந்துடுச்சா!..

ஆனால் அந்த படத்தை பிவிஆர் ஐனாக்ஸ் தியேட்டர்களில் வெளியிடவில்லை என்றும் ஏற்கனவே ஓடிக் கொண்டிருந்த மலையாள படங்களையும் அவர்கள் தூக்கி விட்டதாக ப்ளூ சட்டை மாறன் பகிர் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார்.

தமிழ் படங்கள் மலையாளத்தில் பல ஆண்டுகளாக ஓடி வரும் நிலையில், மலையாள சினிமா இப்போது ஓடும் போது இப்படி செய்வது சரியல்ல என ரசிகர்கள் கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.

Next Story