சியான் விக்ரம் தான் பொன்னியின் செல்வன் 2 தோல்விக்கு காரணமா?.. ப்ளூ சட்டை மாறன் புது உருட்டு!..

கடந்த ஆண்டு பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி 500 கோடி வசூல் செய்து விக்ரம் படத்தையே வீழ்த்தி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. ஆனால், அதன் 2ம் பாகம் இந்த ஆண்டு பெரும் ஹைப்புடன் வெளியான நிலையில், வெறும் 300 கோடி வசூலை மட்டுமே பெற்று ஏகப்பட்ட விமர்சனங்களையும் பெற்றது.

இந்த ஆண்டு பொன்னியின் செல்வன் 2 என்கிற ஒரு படம் வந்ததை போலவே தெரியாத அளவுக்கு ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி ஒட்டுமொத்தமாக வசூலிலும் புகழிலும் அந்த படத்தை ஓவர் ஷேடோ செய்து விட்டது.

இதையும் படிங்க: அது வேற வாய்.. இது நாற வாய்!.. லோகேஷ் கனகராஜ் மேட்டரில் அந்தர் பல்டி!.. வைரலாகும் மீம்ஸ்!..

ஜெயிலர் படத்தை கடந்த ஒரு மாதமாக வச்சு செய்து வந்த ப்ளூ சட்டை மாறனுக்கு அடுத்து ஷாருக்கானின் ஜவான் படத்தை ஓட்ட மனசு இல்லாமல், என்ன செய்வதென்றே தெரியாத நிலையில், சியான் விக்ரமை சீண்ட ஆரம்பித்துள்ளார்.

பொன்னியின் செல்வன் 2 படத்தின் புரமோஷனுக்கு வித விதமான உடைகளை அணிந்து கொண்டு விக்ரம் பண்ண அலப்பறைகள் தான் அந்த படத்தின் தோல்விக்கு காரணம் என ட்வீட் போட்டு சியான் விக்ரம் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகி உள்ளார்.

இதையும் படிங்க: கடைசியில என்ன பலிகடா ஆக்கிட்டானுங்க!.. கலவர பூமியான இசை கச்சேரி.. ரைமிங்கில் புலம்பும் ஏ.ஆர். ரஹ்மான்!..

இயக்குனர் மனிரத்னம் இயக்கத்தில், சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ரகுமான் உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் 2 படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் நடந்த குளறுபடி தான் அந்த படத்தை பொன்னியின் செல்வன் ரசிகர்களே புறக்கணிக்க காரணம் என படத்தின் ரிலீஸ் சமயத்தில் விமர்சனங்கள் எழுந்த நிலையில், தற்போது ப்ளூ சட்டை மாறன் புதிதாக உருட்டுகிறாரே என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

 

Related Articles

Next Story