Connect with us

Cinema News

என்னடா பண்ணி வச்சிருக்கீங்க?.. அயன்மேன் காப்பி தான் ‘Project K’-வா.. ப்ளூ சட்டை மாறன் கலாய்!

ஆதிபுருஷ் படத்தின் இரண்டாம் பாகமா ப்ராஜெக்ட் கே என்றே ரசிகர்கள் பங்கமாக கலாய்த்து வரும் நிலையில், ப்ளூ சட்டை மாறனும் தனது பங்குக்கு ஒரு ட்ரோல் ட்வீட்டை தட்டி விட்டு பக்கத்து ஸ்டேட் பிரபாஸ் ரசிகர்களிடம் வசமாக வாங்கிக் கட்டி வருகிறார்.

கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான், சமந்தா, விஜயதேவரகொண்டா நடிப்பில் இயக்குநர் நாக் அஸ்வின் நடிகையர் திலகம் சாவித்ரியின் பயோபிக்கை மகாநடி என்றும் தமிழில் நடிகையர் திலகம் என்றும் இயக்கி தேசிய விருதுகளை குவித்தார்.

இந்நிலையில், 500 கோடி பட்ஜெட்டில் பான் இந்தியா படமாக உருவாகும் பிரபாஸின் ப்ராஜெக்ட் கே படத்தை இயக்கி வருவதாக ஏகத்துக்கும் பில்டப் கொடுக்கப்பட்ட நிலையில், நடிகையர் திலகம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு கொஞ்சம் கூட ஈடாகாத அளவுக்கு ஒரு போஸ்டரை படக்குழு வெளியிட்டு இருப்பதாக பலரும் கழுவி ஊற்றி வருகின்றனர்.

ராஜமெளலி இல்லாமல்:

இயக்குநர் ராஜமெளலி பாகுபலி படத்தில் நடிகர் பிரபாஸை இந்தியாவின் உச்ச நடிகராகவே மாற்றி இருந்தார். அந்த படமும் இரு பாகங்களும் சேர்த்து 2000 கோடி வரை பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனை செய்து இந்திய திரையுலகை மட்டுமின்றி ஹாலிவுட் திரையுலகத்தையும் இந்திய படங்களை திரும்பி பார்க்கச் செய்தது.

ஆனால், அதன் பிறகு பாலிவுட்டில் வெளியான சாஹோ, டோலிவுட்டில் வெளியான ராதே ஷ்யாம் மற்றும் சமீபத்தில் ராமாயண இதிகாசத்தை மையமாக கொண்டு உருவான ஆதிபுருஷ் என அடுத்தடுத்து ஹாட்ரிக் தோல்வியை தழுவிய பிரபாஸ் ராஜமெளலி இல்லாமல் ஒன்றுமில்லை என்றே விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

சொதப்பிய சலார்:

சமீபத்தில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான சலார் படத்தின் டீசர் காட்சியும் மாஸாக இல்லாமல் ட்ரோல் மெட்டீரியலாகவே மாறியது. பிரபாஸின் முகத்தையே கடைசி வரை பிரசாந்த் நீல் காட்டாத நிலையில், பிருத்விராஜுக்காகவும் அந்த வயதான நடிகருக்காகவும் அந்த டீசர் ஓடியதாக கலாய்த்தனர்.

சலார் அப்டேட் தான் சொதப்பிய நிலையில், ப்ராஜெக்ட் கே படத்தில் கமல்ஹாசன் நடிக்கிறார், தீபிகா படுகோன் நடிக்கிறார், அமிதாப் பச்சன் நடிக்கிறார், திஷா பதானி நடிக்கிறார் என பில்டப் செய்து வந்தனர். ஹாலிவுட்டின் காமிக்கான் உடன் இணைந்து ப்ராஜெக்ட் கே உருவாகப் போவதாகவும் இந்த ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட கமல், பிரபாஸ், தீபிகா படுகோன் எல்லாம் அமெரிக்கா பறந்துள்ளனர் என்றும் ஹைப்பை கிளப்ப பார்த்தனர்.

அயன்மேன் காப்பி:

ஆனால், சற்றுமுன் வெளியான பிரபாஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த ரசிகர்கள் அயன்மேன் படத்தின் அப்பட்டமான காப்பி என்றும் பிரபாஸின் தலையை அப்படியே ஒட்ட வைத்துள்ளனர் என்றும் இந்த படத்துக்கும் ஆதிபுருஷ் படத்துக்கு சிஜி பண்ண அதே டீம் தான் பண்ணதா? என மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.

மேலும், ப்ளூ சட்டை மாறனும் தனது ட்விட்டர் பக்கத்தில் ”Project K – Official poster.
ஆஹா…Excellent creative designing team. கங்குராட்ஸ்.” என அயன்மேன் போஸ்டருடன் கம்பேர் பண்ணி கலாய்த்துள்ளார்.

 

google news
Continue Reading

More in Cinema News

To Top