மஞ்சத்தண்ணிய ஊத்துங்கடா!.. அருவாளுடன் ரெடியான வெங்கட் பிரபு.. ஆடு ஓடுமா? புளூ சட்டை சேட்டை!..

Published on: December 31, 2023
---Advertisement---

நடிகர் விஜய் டபுள் ஆக்‌ஷனில் நடித்து வரும் தளபதி 68 படத்திற்கு தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்கிற டைட்டிலை வெங்கட் பிரபு வைத்து தற்போது புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். வாரிசு ஃபர்ஸ்ட் லுக், லியோ ஃபர்ஸ்ட் லுக் எல்லாம் வெளியாகும் போது வெறித்தனமாக இருந்தது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்தாலே ஒரு வித மரண பீதி ஏற்படுகிறதே ஏன் தெரியலையே என ரசிகர்களே ஹைப் ஆகாத என அடக்கி வாசிக்க ஆரம்பித்துள்ளனர்.

மங்காத்தா படத்தை அஜித்துக்கு கொடுத்த வெங்கட் பிரபு, மாநாடு படத்தின் மூலம் சிம்புவுக்கு கம்பேக் கொடுத்திருந்தார். இந்நிலையில் அடுத்து விஜய்யை இயக்கி வரும் வெங்கட் பிரபு A Venkat Prabhu Hero என்று குறிப்பிட்டுள்ள நிலையில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் சுருக்கமாக ஆல்ரெடி லீக்கான GOAT டைட்டிலைத் தான் வைத்துள்ளார்.

இதையும் படிங்க: சிக்கலில் இருந்து தப்பிக்க மாற்றி அமைக்கப்பட்ட எம்ஜிஆரின் சூப்பர்ஹிட் பாடல்… என்ன நடந்துச்சுன்னு தெரியுமா?

பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, ஜெயராம், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தின் சிஜிக்காக பெரும் செலவை வெங்கட் பிரபு செய்து வருகிறார்.

இதுவரை காட்டாத அளவுக்கு விஜய்யை இளமையாக காட்ட உள்ளாராம். ஆனால், கோட் தான் டைட்டில் என்று தெரிந்ததும் ஆடு சிக்கிடுச்சு என பலரும் மஞ்சத்தண்ணியை ஊற்றி வெங்கட் பிரபு அருக்க ரெடியாகி விட்டார் என போட்டோ மீம் போட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: இரட்டை விஜய்: தளபதி 68 படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இதோ.. படத்தின் தலைப்பு என்ன தெரியுமா?..

ப்ளூ சட்டை மாறன் இந்த ஆண்டின் இறுதி ட்ரோலாக ”குருவி, சுறா, பைரவா, புலி, பீஸ்ட், லியோ… எதுவும் ஓடல. ஆடு… ஓடுமா?” என கேள்வி எழுப்பி உள்ளார். அனைத்து தியேட்டர்களிலும் ஜெயிலர் மற்றும் லியோ அதிகமாக ஓடிய நிலையில், லியோ ஓடலன்னு எப்படி சொல்வீங்க என விஜய் ரசிகர்கள் விழுந்து கடித்து வருகின்றனர்.

 

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.