திரிஷா விவகாரம்.. விஜய், அஜித் அமைதி காப்பது சரியா?.. மீசையே இல்லையா என புளூ சட்டை அசிங்கப்படுத்துறாரே!..

நடிகை திரிஷா குறித்து படுகேவலமான சிந்தனையில் மன்சூர் அலி கான் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகை மாளவிகா மோகனன் முதல் நபராக குரல் கொடுக்க உடனடியாக லியோ படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜும் மன்சூர் அலி கானை கண்டித்திருந்தார்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், நடிகைகள் ரோஜா, குஷ்பு, மஞ்சிமா மோகன் உள்ளிட்டோரும் நடிகை குஷ்புவுக்காக குரல் கொடுத்துள்ளனர். நடிகர்கள் என்று பார்த்தால் சாந்தனு தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். மேலும், நடிகர் சங்கம் சார்பாக கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: திரிஷாவுக்கு கிடைச்ச ஆதரவு இமானுக்கு இல்லையேப்பா!.. இளிச்சவாயானா ஈசியா அடிச்சுடலாமா?

ஆனால், திரிஷாவுடன் சமீபத்தில் லியோ படத்தில் நடித்த நடிகர் விஜய் மற்றும் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வரும் அஜித் குமார் என யாரும் ஒரு கண்டன அறிவிப்பை கூட வெளியிடவில்லையே ஏன் என ப்ளூ சட்டை மாறன் முதல் வலைப்பேச்சு அந்தணன் வரை கேள்வியாக கேட்டு வருகின்றனர்.

பெண்கள் பாதுகாப்புக்காக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கமல்ஹாசன் அடுத்து மணிரத்னம் இயக்கத்தில் தன்னுடன் நடிக்க உள்ள நடிகை த்ரிஷாவுக்காக குரல் ஏதும் கொடுக்கவில்லையே ஏன்? என்கிற கேள்விகள் கிளம்பி உள்ளன.

இதையும் படிங்க: லியோவோட உண்மையான வசூல் இதுதான்!.. புள்ளி விவரங்களுடன் புட்டு புட்டு வைத்த பிரபலம்!..

”த்ரிஷா குறித்து மன்சூர் பேசியதற்கு நடிககைகள் மட்டுமே கண்டனம் தெரிவித்துள்ளனர்‌

இயக்குனர்களில் கார்த்திக் சுப்பராஜ், லோகேஷ் போன்றோர் மட்டுமே பேசியுள்ளனர்.

முன்னணி நடிகர்கள் மற்றும் சீனியர் இயக்குனர்கள் அனைவரும் வாயில் கொழுக்கட்டையை வைத்துள்ளனர்.

இவர்களுடன் பல படங்களில் த்ரிஷா நடித்துள்ளார்.

ஆனால் ஒருவரும் வாய் திறக்கவில்லை. படத்தில் மட்டுமே பெண்களுக்காக புரட்சி வசனம் பேசுவார்கள் இந்த ஹீரோக்கள்.

சீனியர் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் இன்னும் சுத்தம்.

உங்களுக்கு எல்லாம் எதுக்கு மீசை?” என ப்ளூ சட்டை மாறன் ட்வீட் போட்டு அசிங்கப்படுத்தி உள்ளார்.

 

Related Articles

Next Story