திரிஷாவுக்கு கிடைச்ச ஆதரவு இமானுக்கு இல்லையேப்பா!.. இளிச்சவாயானா ஈசியா அடிச்சுடலாமா?

சினிமாவில் பல ஹீரோயின்களுடன் பலாத்கார காட்சியில் நடித்துள்ளேன். லியோ படத்தில் த்ரிஷாவுடன் அதுபோன்ற எந்தவொரு காட்சியும் வைக்காமல் என்னை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஏமாற்றி விட்டார் என மன்சூர் அலி கான் பேசிய நிலையில், அவர் பேசியது ரொம்பவே தப்பு என்றும் அவரது கனவு ஒரு போதும் பலிக்காது என நடிகை த்ரிஷா அதிரடியாக ட்வீட் போட்டிருந்தார்.

உடனடியாக மன்சூர் அலி கானுக்கு எதிராக பல திரை பிரபலங்களும் திரண்டு அவர் விளக்கம் கொடுத்த பின்னரும் அதையெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது என அடி வெளுத்து வருகின்றனர்.

இதையும் படிங்க: தன்னை எதிர்க்கிறவர்களை இப்படித்தான் க்ளீன்போல்ட் ஆக்குவாரா அஜித்? கலைப்புலி தாணுவுக்கு ஏற்பட்ட நிலைமை?

இந்நிலையில், பல முன்னணி ஹீரோக்களுக்கு இசையமைத்து வந்த இசையமைப்பாளர் டி. இமான் நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்து விட்டதாக வெளிப்படையாக கூறிய நிலையில், ஒருத்தர் கூட இமானுக்காக குரல் கொடுக்கவில்லையே ஏன் என்கிற கேள்வியை சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

டி. இமான் - சிவகார்த்திகேயன் பற்றிய பிரச்சனையை வெளிப்படையாக சொல்லவில்லை என்றாலும், என்ன துரோகம் செய்தார் என நடிகர் சங்கம் கேட்டிருக்க வேண்டாமா? அல்லது தேவையில்லாமல் ஒரு நடிகர் மேல் வீண் பழி சுமத்துவது சரியா? என கேட்டிருக்கலாம். ஆனால், நடிகர்கள் ஒன்று என்றால் அமைதியாக இருப்பதும் நடிகை ட்வீட் போட்டால் மன்சூர் அலி கான் போன்ற நடிகர்கள் தானே என எகிறிக் கொண்டு வருவதும் சரியான அணுகுமுறையா என நெட்டிசன்கள் புதிய பஞ்சாயத்தை பற்ற வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: ராதா மகள்!.. கோ பட ஹீரோயின் கார்த்திகா நாயர் திருமணம்.. 80ஸ் பிரபலங்கள் மொத்தமும் ஆஜர்!..

 

Related Articles

Next Story